பக்கம்:மலருக்கு மது ஊட்டிய வண்டு.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

மலருக்கு மது ஊட்டிய வண்டு

8 மலருக்கு மது ஊட்டிய வண்டு

தடவை கர்நாடக சங்கீதம் சொல்லிக் கொள்ள வேண்டும் என்கிற ஆவலோடு வந்திருக்கிறார்கள். சடகோபனும் பாகவதரும் நெருங்கிய நண்பர்கள்; அத்தோடு, அவர் களுக்குப் பாட்டுச் சொல்லிக் கொடுக்கத் தகுந்தவர் பாக வதர்தான் என்பது சடகோபனின் எண்ணம்.

முதலில் பாகவதர் சடகோபனிடம் இந்த ஏற்பாட் டிற்கு ஒப்புக் கொள்ளவில்லை. 'இனம், நாடு, மொழி இவற்றால் வேறுபட்ட மேல்.’ நாட்டாருக்கு நம்முடைய கர்நாடக இசை சுட்டுப் போட்டாலும் வராது என்பது பாகவதரின் எண்ணம். ஆனால் சட கோபன் விடவில்லை.

"நீங்கள் வித்தையை ஆரம்பித்துப் பாருங்களேன்: வந்தால் தொடரட்டும்; இல்லாவிட்டால் அவர்களாகவே நின்று விடுகிறார்கள். நான் கூட இப்படித்தான் இவர் களைப் பற்றி அலட்சியமாக ஆரம்பத்தில் நினைத்தேன்' என்று சடகோபன் கூறவே, பாகவதரும் தன் பிடிவாதத் தைத் தளர்த்தினார்.

"என்னை என்ன செய்யச் சொல்லறேள்; காத்துண்டு இருக்காளே; அவாளை மேலே அனுப்பவா?

-இப்படிக் கீழேயிருந்தே எல்லாவற்றையும் கேட்க வேண்டியிருக்கிறதே; அவர்கள் என்ன நினைப்பார்கள்? Эь என்று கல்யாணி அம்மாளுக்குக் கூச்சமாக இருந்தது என்றாலும், ரத்த அழுத்த வியாதி காரணமாகத் தன்னை மாடிப்படி ஏறக் கூடாது.-என்று உத்தரவு போட்டு விட்ட டாக்டருடைய வார்த்தைகளைப் புறக்கணிக்கவும் அவளுக்குப் பயமாக இருந்தது.

"மேலே இவர், இன்னும் என்னதான் பண்ணிக் கொண்டிருக்கிறார்...? என்று திரும்பியபோது பாகவதர், கீழே இறங்கி வந்து கொண்டிருந்தார்.