பக்கம்:மலருக்கு மது ஊட்டிய வண்டு.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கே. பி. நீலமணி

51

கே. பி. நீலமணி 51

கொண்டிருந்தது. காசிராஜன் எதையும் அறிந்ததாகக் காட்டிக் கொள்ளவில்லை.

அன்றிரவு, பிள்ளைக்குச் சாதம் போட அம்மா சாந்தாவை அநுமதிக்கவில்லை. சாப்பாடு போடும் போது சாந்தா கூறியது முழுவதையும் அம்மா கூறி, 'அவளுக்குக் குழந்தையே பிறக்காதாம்டா டாக்டரே சொல்லிவிட்டார். இனிமேலாவது நாம் அந்தக் கல்யாணி யைப்பற்றி யோசிக்கலாமாடா ராஜா?' என்று பரிவோடு கேட்டாள்.

'அது நிச்சயம் நடவாதம்மா. காசிராஜன் ஒரே வார்த்தையில் கூறிவிட்டுப் பாதிச் சாப்பாட்டிலேயே எழுந்து கைகழுவச் சென்றுவிட்டான். அம்மா அவனை ஆச்சரியத்திடனும் அதிர்ச்சியுடனும் பார்த்துக்கொண் டிருந்தாள். அதை லட்சியம் செய்யாதவன் போல் அவன் தன் அறைக்குச் சென்று விட்டான்.

சாந்தாவின் வைத்தியப் பரிசோதனை சாதகமாக இல்லை என்பதை, அவன் வீட்டுக்குள் நுழைந்தபோது கேட்க நேர்ந்த சம்பாஷணையிலிருந்தே புரிந்துகொண் டான். மனைவியைப் பற்றி இரக்கமும், அதே சமயத்தில் ஒருவித ஆத்மத் திருப்தியும் மன அமைதியும் அப்போது அவன் உள்ளத்தில் நிலவியிருந்தன.

அம்மா சாந்தாவைச் சாப்பிடக் கூப்பிட்டாள். சாந்தா தனக்குப் பசியில்லை என்று கூறிவிட்டாள். அதன் பிறகு அம்மா அவளை வருந்தி அழைக்கவோ வற்புறுத்தவோ இல்லை. அடுக்களைக் காரியங்களை முடித்துக்கொண்டு மாடிக்குப் படுக்கச் சென்று விட்டாள்.

காசிராஜன் மனம் அமைதியிழந்து தவித்துக்கொண் டிருந்தது. சாந்தாவைத் தன் அறைக்கு அழைத்துச் சென்று சமாதானப்படுத்தினான்.