பக்கம்:மலருக்கு மது ஊட்டிய வண்டு.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கே. பி. நீலமணி

65

கே. பி நீலமணி 65

வழிப்படி நடந்து சென்று கொண்டிருந்த பிள்ளைக்குத் திடீரென்று தூக்கி வாரிப்போட்டது.

பம்பாயில் சுவர்க்கமும் நகரமும் இத்தனை அருகில் தான் இருக்குமா? சற்று முன்புவரை தேவலோகம் போல் ஒளி வீசிக் கொண்டிருந்த இடமெலாம், கடந்து எப்ப டியோ கும்மிருட்டான சந்தடியற்ற தாராவி பகுதிக்கு அவர் வந்து சேர்ந்து விட்டார். குடிக்கும், கொலைக்கும். கொள்ளைக்கும் இந்தப் பகுதிப் பெயர் பெற்ற இடமாயிற்றே!

அவர் உடல் நடுங்கியது. இரவு மணி பனிரெண்டுக்கு மேல் இருக்கும். குடிசைகள் கொண்ட அப்பகுதியில், அத்திக் கனியாக-எங்கோ மூலைக்கொரு கம்பத்தில்-மின்விளக்கு தொங்கிக் கொண்டிருந்தது. சாக்கடை நாற்றமும், கொசுக்களின் ரீங்காரமும் குடலைப்புரட்டி எடுக்க அந்தப்பேட்டை பகுதி வழியே அவர் போய்க் கொண் டிருந்தார்.

சட்டென்று எதையோ நினைத்துக் கொண்டவர் போல் பிள்ளை தன் அடிவயிற்றைத் தொட்டுப் பார்த்துக் கொண்டார். அப்பாடா! சிங்கப்பூர் பெல்டும், அதனுள் இருக்கும் கத்தை கத்தையான நோட்டுகளும் பத்திரமா யிருந்தன.

இருந்தாலும் அப்போதுதான் அவருக்கு- அந்த அகால வேளையில் தாராவிக்கு வந்துவிட்ட பிறகுமுதன்முதலாக பயம் தோன்றியது. பம்பாயைப்பற்றி தாமோதரன் வர்ணித்த பயங்கரமான வரிகள் மீண்டும் நினைவுக்குவந்து அவர் நெஞ்சைக்கலக்கின. அதேநேரம்

கையில் கத்தி பளபளக்க கபர்தார்-ரூப்யா தோ; நஹறிதோ...மர் கயா...ஜரூர்’ என்று பயங்கரமான குரலில் மிரட்டிய வண்ணம், காலனைப்போல் எதிரில் வந்து

Lo—5