பக்கம்:மலருக்கு மது ஊட்டிய வண்டு.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 மலருக்கு மது ஊட்டிய வண்டு

பார்க்கப் போகிறேன்; எப்பப் பார்க்கப் போகிறேன்" என்று காத்திருக்கிறாளே. அவளுக்கு என்ன பதில் சொல்லுவேன்? அவள் முகத்தில் போய் எப்படியடா விழிப்பேன்’ என்று அழும்போதே கருணாகரன் அவர்

வாயைப் பொத்தி, சூழ்நிலையை உணர்த்தி மெதுவாக . ஆனால் சற்று அழுத்தமாகவே கூறினான்:

"அப்பா, இங்கே நீங்கள் என் தந்தையுமல்ல: நான் உங்கள் மகன் கருணாகரனும் அல்ல. இங்கு என் பெயர் தன்ராஜ் பிரசித்தி பெற்ற பாங்க் மோசடி, வழிப்பறித் திருடன்.என்னைப் பிடித்துத் தருபவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் இனாம் தருவதாக இந்த இலாகாவே அறிவித்திருக் கிறது. ஆனால் அந்த அதிர்ஷ்டம் இதுவரை யாருக்கும் வாய்க்கவில்லை. உங்கள் குரலைக் கேட்டபிறகு சண்டை போடவோ, உங்களைத் தாக்கவோ முடியாமல் ஏதோ ஒருசக்தி-ஒருவித உணர்வு என்னைத் தடுத்தது. நான் உங்களிடம் வசமிழந்துவிட்டேன். அதற்குக் காரணமும் இப்போது புரிந்துவிட்டது. சரி, நேரமாயிற்று. நான் கூறியதெல்லாம் ஞாபகமிருக்கட்டும். வாக்குமூலத்தில் நீங்கள் யாரோ; நான் யாரோ என்பதை மறந்து விடாதீர்கள். பரிசை வாங்கமறந்துவிடாதீர்கள். கண்டிப் பாகப் பெற்றுக்கொண்டு செல்லுங்கள். மறக்காமல் அம்மாவிடம் கூறுங்கள்; 'விரைவிலேயே உன் மகன் நல்லவனாகக் திருந்தி தானே உன்னைத் தேடி வருவான்?" என்று. இப்படி அவன் கூறிக் கொண்டிருக்கும்போதே வாசலிலே கேட்ட பூட்ஸ் ஒலியைக் கேட்டு கருணாகரன்' என்னும் தன்ராஜ் சட்டென்று அந்த அறையின் மூலையில் சென்று முடங்கிவிட் டான்.

பிள்ளையும் அந்தக் குறிப்பையுணர்ந்து பளிச்சென்று தன்னுடைய பெஞ்சில் அமர்ந்துவிட்டார்.