பக்கம்:மலருக்கு மது ஊட்டிய வண்டு.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கே. பி. நீலமணி

69

கே. ப. நலமனி 69

காட்டினான் பிள்ளைக்கு உடம்பெல்லாம் ஒருகணம் உதறல் எடுத்தது. எதற்காகக் கூப்பிடுகிறான்?

  • "<9ј LILJгт, பயப்படாமல் வாருங்களேன்; ஒரு

விஷயம்.'

'அப்பாவா? பயப்படாமல் வருவதா? இது என்ன கூத்து. இவனுக்கு நான் எந்த ஜாமத்தில் அப்பாவாக இருந் தேன். மெல்ல உறவு கொண்டாடி அழைத்து. அருகில் வந்ததும் 'லபக் கென்று கழுத்தைப் பிடித்து நெரித்து பழி தீர்த்துக் கொள்ளத்தான் அழைக்கிறானோ

-இப்படி அவர் எண்ணிக் கொண்டிருப்பதற்குள் அந்தக் கேடி மீண்டும் கூப்பிட்டான்.

"அப்பா! இன்னும் என்னை உங்களுக்குப் புரிய வில்லையா? நான் தான் அப்பா கருணாகரன். அம்மா கஞ்சனூரில் தான் இருக்கிறாளா, அல்லது கூடவே அழைத்து வந்திருக்கிறீர்களா? வானில் ஏறும்போதே உங்களை தான் அடையாளம் கண்டு கொண்டு விட்டேன் அப்பா'

பிள்ளைக்கு ஒர் உலுக்கு உலுக்கியது. கூர்ந்து கவனித் தார். பொய் மீசையையும், போலி மச்சத்தையும் இப்போது கேடியிடம் காணவில்லை. அவன் தன் மகன் கருணாகரன் தான் என்பதற்கு அதற்கு மேல் அவருக்கு எவ்வித விளக்கமும் வேண்டியிருக்கவில்லை. பரபரப்புடன் வாசலை எட்டிப் பார்த்தார். அந்த இரு ஜவான்களும் அரட்டையோடு சுருட்டு இழுக்கும் சவாரஸ்யத்தில் இருந் தனா.

பிள்ளையவர்கள் அந்த முரட்டுக் கம்பிக் கதவில் தலையை மோதிக்கொண்டு; கருணாகரா, கடைசியில் இங்கேயும் உனக்கு நான்தானாடா எமனாக வர வேண்டும்? அங்கே உன் அம்மா உன்னை எப்பப்