உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஜவஹர் ஒருநாள் வேட்டைக்குத்
தனியே கிளம்பிச் சென்றனரே.
அவரது கையில் துப்பாக்கி
ஆயுத மாக இருந்ததுவே.

குட்டி மான்ஒன் றவர்முன்னே
குதித்து ஓடி வந்ததுவே.
சுட்டார், ஜவஹர். உடனேயே,
துடித்துக் கொண்டே அம்மானும்,

வந்து ஜவஹர் காலடியில்
மயங்கி வீழ லானதுவே!
அந்தக் காட்சி ஜவஹரையே
அதிகம் கலக்கி விட்டதுவே.

எவர்க்கும் கெடுதி செய்தறியேன்.
என்னைச் சுடுவது சரியாமோ?”
ஜவஹரைப் பார்த்துக் கேட்பதுபோல்
தரையில் கிடந்தது, மான்குட்டி.


185