உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மலரும் உள்ளம்-1.pdf

பட்டணத்தைப் பார்க்கப்போகும்
சின்னமாமா—இந்தப்
பையனைநீ மறந்திடாதே.
சின்னமாமா.

பாப்பாவுக்கு ஊதுகுழல்
சின்னமாமா—அந்தப்
பட்டணத்தில் வாங்கிவாராய்,
சின்னமாமா.

அக்காளுக்கு ரப்பர்வளை
சின்னமாமா—அங்கே
அழகழகாய் வாங்கிவாராய்,
சின்னமாமா.

பிரியமுள்ள அம்மாவுக்கு,
சின்னமாமா—நல்ல
பெங்களூருச் சேலைவேண்டும்,
சின்னமாமா.


43

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/47&oldid=1724764" இலிருந்து மீள்விக்கப்பட்டது