உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மலரும் உள்ளம்-1.pdf

ஆட்டுக் குட்டி, என்னைநீ
அழைப்ப தெங்கே, கூறுவாய்?
ஓட்டம் ஓட்ட மாகவே
ஓடி வரவா சொல்கிறாய்?

புல்லி ருக்கும் பக்கமே
போகத் தானே அழைக்கிறாய்?
புல்லால் எனது பசியினைப்
போக்கிக் கொள்ள முடியுமோ?

அம்மா தோசை தின்னவே
அழைக்கி றாள்;நான் போகிறேன்.
சும்மா இங்கு நிற்பதேன்?
சொன்னேன்; ஓடிச் செல்லுவாய்.


52

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/57&oldid=1720206" இலிருந்து மீள்விக்கப்பட்டது