உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மலரும் உள்ளம்-1.pdf

சின்னச் சின்னப் பொம்மை.
சிங்காரப் பொம்மை.
என்ன வேண்டும் சொல்லே?
ஏனோ பேச வில்லை?

பாட ஆட மாட்டாய்.
பரம சாதுப் பொம்மை.
தேட வைத்து விட்டே
தெருவில் ஓட மாட்டாய்!

வளர வில்லை; உன்றன்
வயதும் தெரிய வில்லை.
அழவே மாட்டாய். நல்ல
அழகுப் பொம்மை நீதான்.

கொஞ்ச மேனும் உண்பாய்.
கோபம் வேண்டாம், கண்ணே.
பஞ்சு மெத்தை தாரேன்.
படுத்துக் கொள்வாய், கண்ணே.


53

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/58&oldid=1724597" இலிருந்து மீள்விக்கப்பட்டது