பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்த நாளை நாமெலாம் இன்ப மாகப் போற்றுவோம். எந்த நாளும் இப்படி } இருக்க வழிகள் தேடுவோம். அசுரன் அழிந்த நாளென ஆடிப் பாடி மகிழுவோம். அசுரத் தனங்கள் யாவையும் அழிக்க நாமும் முயலுவோம். ஆடை புதிதாய் உடுத்தியே ஆனந் தத்தில் மூழ்குவோம். வாடும் ஏழை, உடையுடன் வாழும் வகையைக் காணுவோம். வெடிகள் தம்மை இன்றுநாம் வீரர் போலக் கொளுத்துவோம். கொடிய எண்ணம் யாவையும் கொளுத்தி வீரம் காட்டுவோம். 103

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/106&oldid=859881" இலிருந்து மீள்விக்கப்பட்டது