பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நட்டு வனார் இல்லாமலே ஆடும் மயில் இது என்றும் நடன மேடை ஏறிடாமல் ஆடும் மயில் இது. கொட்டு முழக்கம் இல்லாமலே ஆடும் மயில் இது நன்கு குலுக்கி மினுக்கித் தளுக்கியுமே ஆடும் மயில் இது. பயிற்சி ஏதும் இல்லாமலே ஆடும் மயில் இது பின் பாட்டு யாரும் பாடிடாமல் ஆடும் மயில் இது. மயக்கும் வண்ண உடையுடனே ஆடும் மயில் இது - அதில் வட்ட வட்டக் கண்தெரிய ஆடும் மயில் இது.

  1. 05
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/108&oldid=859885" இலிருந்து மீள்விக்கப்பட்டது