பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்பு உத்தம ரில்மிக உத்தமராய் - இந்த உலகில் உதித்தவர் நால்வரென்போம். அத்தகை நால்வரை நல்கியதாம் - நமது) ஆசியாக் கண்டமென் றேயுரைப்போம். ஏசுவும் நபிகளும் தோன்றியதே - இந்த - ஈடில்லா ஆசியாக் கண்டமென்போம். மாசில்லாப் புத்தரும் அன்னார்.பின்னே - இந்த மண்ணிலே காந்தியும் வந்தாரென்போம். சித்திரந் தன்னிலும் துயரமதைக் - காணின் சிந்தை நெகிழ்ந்திடும் காந்திமகான் இத்தல மக்களின் இன்னல்கள் போக்கிட ஏற்றநல் அன்பு வழிவகுத்தார். இப்பாடல் 1954 ஆம் ஆண்டு காந்தி பிறந்த நாளில் திருச்சி வானொலி நிலையத்தார் ஏற்பாடு செய்த கவி அரங்கத்தில் ஒலி பரப்பப் பெற்றதாகும். 137

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/141&oldid=859953" இலிருந்து மீள்விக்கப்பட்டது