பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழகு மிக்க பிள்ளையே, அங்கும் இங்கும் ஒடியே பழங்கள் தேடிப் பிடிக்கிறாய். பையப் பையக் கொறிக்கிறாய். வளைத்து வாலைத் தூக்குவாய். மரத்தின் உச்சி ஏறுவாய். கிளைகள் தோறும் தாவுவாய். கெடுதி ஏதும் செய்திடாய். மூன்று கோடு முதுகிலே முன்பு ராமர் தந்ததோ? நான்கு முகத்துப் பிரமனால், நன்கு படைக்கப் பட்டதோ? கேட்ட கேள்வி கேட்டதும் கீச்சுக் கீச்சு என்கிறாய். ஒட்டம் பிடிக்கப் பார்க்கிறாய். ஒளிந்து கொள்ள நினைக்கிறாய். 51

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/56&oldid=860112" இலிருந்து மீள்விக்கப்பட்டது