பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒட்டுப் போட்ட சட்டை - அதை உடம்பில் மாட்டிக் கொண்டு குட்டிக் கரணம் போடும் - இந்தக் குரங்கைப் பாராய், தம்பி. குல்லாப் போட்ட குரங்கு - துள்ளிக் கோலைத் தாண்டும் குரங்கு. பல்லை இளித்துக் காட்டி - நம்மைப் பழிக்கும் பொல்லாக் குரங்கு. நாமம் போட்ட குரங்கு - நன்றாய் நடனம் ஆடும் குரங்கு. ராமா ராமா என்றால் - உற்று நம்மைப் பார்க்கும் குரங்கு கூழைக் கும்பிடு போடும் - இது கோல்எ டுத்தால் ஆடும். வாழைப் பழத்தைக் கொடுத்தால் - அதை வாயில் அடக்கிக் கொள்ளும். 85

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/90&oldid=860150" இலிருந்து மீள்விக்கப்பட்டது