பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

登G மலரும் நினைவுகள் ஆண்டிற்கு நான்கு முறை காரைக்குடியிலிருந்து சென்னைக்கு வந்துபோகும் வாய்ப்புகள் இருந்தன. * மயிலைத் தொல்காப்பியர் (35, இராக்கியப்ப முதலித். தெரு, சென்னை-4) இல்லத்தில்தான் தங்குவேன். ஆனால் திரு. நாயுடு அவர்களைச் சந்தித்து அளவளா வாமல் திரும்புவதில்லை. வரும்போதெல்லாம் ஒரு வேளை யாவது அவர் இல்லத்தில் உணவு கொள்ளச் செய்து விடுவார். அவ்வளவு பாசத்துடன் பழகுவார். அவர் படைத்த நூல்களை அவ்வப்பொழுது எனக்காக ஒரு படியை விலை கொடுத்து வாங்கி வைத்து விடுவார் மயிலைத் தொல்காப்பியர். 1960-ஆகஸ்டு முதல் நான் திருப்பதி திருவேங்கடவன் பல்கலைக் கழகத்தில் பணியேற்ற பிறகு திங்களுக்கு ஒரு முறை வார விடுமுறை நாட்களில் சென்னைக்கு வந்து திரும்புவதுண்டு. அப்பொழுது பன்மொழிப் புலவர் ரெட்டியார் அவர்களின் உடல்நிலை குன்றி அடிக்கடிச் சிகிச்சை பெற்று வந்தார். அவரைப் பார்த்து அவருக்கு ஆறுதல் கூறவும் நான் ஆறுதல் பெறவும் நான் அடிக்கடிச் சென்னைப் பயணத்தைத் தவறாது மேற்கொண்டிருந் தேன். அப்பொழுதெல்லாம் திரு. நாயுடு அவர்களைப் பார்த்து அளவளாவாமல் திரும்புவதில்லை . திரு. ரெட்டியார், திரு. நாயுடு ஆகிய இரண்டு வைணவ அடியார்களை அடிக்கடிச் சந்தித்து உரையாடியதாலும், திரு. நாயுடு அவர்களின் படைப்புகள் என்னை ஈர்த்த தாலுமே என்னைத் திருவேங்கட முடையான்நம்மாழ்வார் தத்துவத்தை என் டாக்டர் பட்டத்திற்கு ஆய்வுப் பொருளைத் தேர்ந்து எடுத்துக் கொள்ளச் செய்தனனோ என்று கூட நினைக்கத் தோன்றுகின்றது. அல்லது எம். பெருமான் வாழும் சூழ்நிலையே என்னைச் சார்ந்ததன் வண்ணமாகச் செய்து விட்டதோ என்று கூடக் கருதுவது: பொருத்தமாகின்றது.