பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பு. ரா. புருடோத்தம நாயுடு 35 சென்னைக் சட்டக் கல்லூரியில் பணியாற்றிய திரு. S. கோவிந்தராஜுலு அவர்கட்கும் இந்தப் பணித் திட்டம் உருவாவதற்குப் பெரும்பங்கு உண்டு. பல்கலைக் கழக விதிப்படி விளம்பரம் செய்யப்பெற்றது; தேர்வுக் குழுவும் அமைக்கப்பெற்றது. திரு. புருடோத்தமநாயுடு அவர்கள் விரிவுரையாளராகத் தேர்ந்தெடுக்கப்பெற்றார். இதுதான் திரு. புருடோத்தமநாயுடு அவர்கள் ஈடுமுப்பத் தாறாயிரப் படியைத் தமிழாக்கம் செய்வதற்குத் தேர்ந் தெடுக்கப் பெறுவதற்குத் திரைமறைவில் நடைபெற்ற வரலாறு . திரு. நாயுடு அவர்கள் தாம் ஏற்றுக் கொண்ட தெய்வப்பணியை மிக அற்புதமாக நிறைவேற்றி னார்கள். 1952 முதல் தொகுதியும் 1959 இல் பத்தாம் தொகுதியும் வெளி வந்தன. அதன் பிறகு அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரின் ஆசாரிய ஹிருதயம் என்ற நூலுக்கு மணவாளமாமுனிகளின் மணிப் பிரவாள நடையிலுள்ள உரையைத் தமிழாக்கம் செய்யும் பணியை மேற்கொண்டு அதனைச் சிறப்புறச் செய்து முடித்தார்கள். இது நான்கு பகுதிகளாக அமைந்து 1-2 பகுதிகள்: 3-4 பகுதிகள் சேர்ந்து இரண்டு தொகுதிகளாக (1965) வெளியிட்டு ஒய்வு பெற்றார், பின்னர் அண்ணா மலைப் பல்கலைக் கழகத்தில் பல்கலைக் கழக மானிய ஆணையின் உதவியினால் கிடைத்த இரண்டாண்டுப் பணியை ஏற்றுக் கொண்டு பிள்ளை உலக ஆசிரியரால் இயற்றப் பெற்ற ரீவசன பூஷணத்திற்கு மணவாளமாமுனி கள் எழுதிய மணிப்பிரவாள நடையிலுள்ள உரையைத் தமிழாக்கம் செய்து கடலூர் தி. கி. நாராயணசாமி நாயுடுமூலம் வெளியிட ஏற்பாடு செய்தார் (1970), காரைக்குடியிலிருந்தபோது சென்னைப் பல்கலைக் கழகக் கல்வியியல் ஆலோசனைக் குழுவிற்கும் (Academic Council) ஆட்சிப் பேரவைக்கும் (Senate) உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றிருந்தேன். 1953-56 ஆண்டுகளில்