பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 மலரும் நினைவுகள் ஆய்வாளராகப் பணியாற்றும் திரு. T. W. கோபாலய்யர் தான், நான் புதுவை போகும்போதெல்லாம் என்னிடம் அன்பாகவும் மரியாதையாகவும் பழகி வருபவர். நல்லாசிரியராகத் திகழ்ந்து நூற்றுக்கணக்கான தமிழ்ப் புலவர்களை உருவாக்கிய திரு. நாயுடு அவர்கள் சென்னைக்கு வந்து சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஆய்வுப் பேராசிரியராகப் பணி ஏற்ற பிறகுதான் அவருடைய பேரும் புகழும் தமிழுலகமெங்கும் கலங்கரை விளக்குபோல் ஒளி காட்டத் தொடங்கியது.அக்காலத்தில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பாடத் திட்டக் குழுவின் தலைவராக இருந்தவர். திரு. T. M. நாராயண சாமிப் பிள்ளை. மணிப்பிரவாள நடையிலுள்ள ஈடு முப்பத்தாறாயிரப் படியைத் (திருவாய்மொழியின் உரை) தமிழாக்கம் செய்து தமிழுலகுக்கு அளிக்க வேண்டும் என்று திருவுள்ளங் கொண்டார் திரு. பிள்ளையவர்கள். இவர் அக்காலத்தில் தமிழ் ஆய்வாளராகப் பணியாற்றி வந்த பன்மொழிப் புலவர் வேங்கடராஜூலு ரெட்டியாரைக் கலந்து இந்தப் பெரும் பணிக்குத் தக்கவர் யார் என்பதை ஆராயும்போது திரு. ரெட்டியார் அவர்கள், திரு. நாயுடு அவர்களால்தான் இந்தத் தெய்வப் பணியை நிறைவேற்ற முடியும் என்று தெரிவித்தார்கள். அக்காலத்தில், இராஜாஜி அமைச்சரவையில் இந்து -அறநிலையத்துறை அமைச்சராகத் திகழ்ந்த திரு K. வேங்கடசாமி நாயுடு, அவர்களும் இப்பணியில் மிகவும் அக்கறை காட்டி வந்தார். திரு. பிள்ளையவர்கள், திரு . K. வேங்கடசாமி நாயுடு அவர்கள் ஆகிய இருவரும் அக்காலத்தில் சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தராக இருந்த டாக்டர் A. L. முதலியாரைச் சந்தித்து இப்பெரும் பணியைப் பல்கலைக் கழகம் ஏற்றுச் செய்ய வேண்டும் என்றும், இதற்குத் தக்கவர் திரு பு. ரா. புருடோத்தம நாயுடு அவர்களே என்றும் தெரிவித்தனர். அக்காலத்தில்