பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:பு. ரா. புருடோத்தம நாயுடு 83 கண்டு மகிழ்ந்ததுண்டு. பண்டைக் காலத்தில் நடைபெற்ற குருகுல வாசத்தை இது நினைப்பூட்டுவதிாக இருந்தது. அப்போது S. K. இராமராசன் (உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்; இப் போது தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக் கழகத்தில் பேரகராதித் துறையில் பணியாற்றுபவர்) , மு. இராமசாமி (தமிழாசிரிய ராகப் பணியாற்றி ஒய்வு பெற்றவர்; தற்சமயம் இராசி புரத்தில் நிலையாக வாழ்ந்து கொண்டு பேச்சாலும் எழுத்தாலும் இலக்கியப் பணி ஆற்றி வருபவர்) மாணாக்கர் களாக இருந்தனர். இவர்கள் 1946-இல் வித்துவான் இறுதி நிலைத் தேர்வு எழுத வேண்டியவர்கள். நான் திருவையாற்றிற்கு வந்தபோது சில சமயங் களில்தான் திரு. நாயுடு அவர்கள் சேனாவரையத்தில் சில ஐயங்களை அகற்றினார்கள். அந்த ஆண்டு (1945) வித்துவான் இறுதி நிலைத் தேர்வு எழுத இருந்த T. W. கோபாலன் என்ற அவருடைய தலைமாணாக்கனிடம் என்னை இணைத்து விட்டார். எல்லாப் பாடங்களிலும் எழும் எல்லாவித ஐயங்களையும் அவனிடமே கேட்டுத் தெளியலாம் என்று தெரிவித்து விட்டார். இந்த மாணாக்கன் வியத்தகு நினைவாற்றலையுடையவன். எதைக் கேட்டாலும் சொல்லுவான். இவன் ஒரு 'கம்ப்யூட்டர்’ மாதிரி. எதைக் கேட்டாலும் கடல் மடை திறந்த வெள்ளம்போல் விடை பெருக்கெடுத்தோடும்; பொரி மத்தாப்பில் தி வைத்தால்,அஃது எப்படிப் பொரிந்து மேல் எழும்புகின்றதோ அப்படியிருக்கும். இப்படி ஒரு மாணாக்கனை நான் பார்த்ததில்லை. இவன் அந்த ஆண்டு பல்கலைக் கழகத் தேர்வில், முதல் வகுப்பில் முதல் மாணாக்கனாகத் தேர்ந்து ரூ 10 06| = பரிசையும் பெற்றான். இவன் வேறு யாரும் இல்லை; தற்சமயம், திருவையாற்று அரசர் கல்லூரியில் பேராசிரியராகவும், முதல்வராகவும் பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகு புதுச்சேரி .6%t%G`ur«ö3; —9,ü6)] [öl [Digua^Tgi; 3)6ö (French institute)