பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 மலரும் நினைவுகள் உயிர் அணு வடிவினதாக உள்ளது; அஃது உடம்பு முழுவதும் தன் ஞானத்தால் வியாபித்து, உடம்பு முழுவதி லுமுள்ள நிகழ்ச்சிகளை அறிகின்றது; அதனால் அதனைச் சிறியது என்றார். பிறத்தல்-உயிர் தன் வினைகளுக்கேற்ப உடம்பை அடைதல். எத்தைத் தின்று எங்கே கிடக்கும்? (அவ்வாறு உடம்பை அடைந்த உயிர்) எதனை அநுபவித்து எங்கே இருக்கும்? என்றார் என்று விளக்கினார் திரு. நாயுடு அவர்கள். இதன் பிறகு நம்மாழ்வார் தந்த விடை யின் விளக்கம் வருகின்றது. அத்தைத் தின்று அங்கே கிடக்கும்-உடம்பை அடைந்த உயிர் தன் வினைப்பயனை அநுபவித்துக்கொண்டு அவ்வுடம்பிலேயே இருக்கும் என்பது நம்மாழ்வாரின் விடை விளக்கம். உயிர் அந்தந்தப் பிறப்பிற்குரிய வினை முடியும்வரை அந்தந்த உடம்பில் இருக்கும் என்பது இதன் கருத்தாகும். இதன் பிறகு "நம்மாழ்வார் அவதரித்த காரணத்தால் திருக்குருகூர் என்ற பெயர் வழக்கு மாறி ஆழ்வார் திருநகரி என்ற பெயராலே வழங்கப்படுகின்றது. திருக்குருகூர் என்ற பெயர் நூல் வழக்கில் மட்டுமே உள்ளது' என்று கூறிய கருத்து மாணாக்கர்கட்கும் நல்லவிருந்தாக அமைந்தது; எம் போலியருக்கும் ஒரு சிறந்த செய்தியை அறிந்த மன நிறைவு ஏற்பட்டது. அடுத்து, திருவாய்மொழியிலுள்ள சில பாசுரங்களை எடுத்துக் கொண்டு விளக்கின. பாங்கு கேட்டிருந்த சில பெரியோர்களை பக்தியின் கொடுமுடிக்கு இட்டுச் சென்று விட்டது. 1945-இல் அடியேனும் வித்து வான்’ பட்டம் பெற் றேன். வித்துவான் தேர்வுக்குப் படிக்கும்போது சேனா வரையம் தேர்வுக்குரிய பாடப் பகுதியாக இருந்தது. அதைப் படிக்கும்போது அங்காங்கு என் மனத்தில் எழுந்த ஐயங்களைப் போக்கிக் கொள்ள விரும்பிச் சில வாரங்கள் சனி-ஞாயிறு விடுமுறைகளில் திருவையாற்றிற்குப் போய் வருவதுண்டு. விடுமுறைக் காலங்களிலும் சில நன்மாணாக் கர்கள் திருநாயுடுவைச்சூழ்ந்துகொண்டு இருந்ததை நேரில்