பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பு. ரா. புருடோத்தம நாயுடு 81 கின்றார் மதுரகவிகள்." அவருடைய நிலையை ஆராய்ந் தறிய எண்ணி ஒரு சிறுகலை எடுத்து அவர்முன் இட்டு ஒலி உண்டாக்குகின்றார். உடனே குருகைபிரான் கண் விழித்து நோக்குகின்றார். மதுரகவிகள் அவரோடு பேசி யறிய எண்ணி, செத்ததன் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத்தின்று எங்கே கிடக்கும்? என்ற வினாவை விடுக்கின்றார். இதற்கு நம்மாழ்வார் வாயிலிருந்து, அத்தைத் தின்று அங்கே கிடக்கும்’ என்ற விடைவருகின்றது. அப்போது-ஏன் இன்றும் இப்போதும் கூடத்தான்துறையூரில் வைணவம் என்பது வீசை என்ன விலை? என்று கேட்பது போலத் தான். எங்களுக்கெல்லாம் எதிரும் புதிருமாக இந்த உரையாடலைத் திரு. நாயுடு அவர்கள் விளக்குகின்றார்கள். செத்தது-உடல் . உடம்பு மூலப் பகுதியின் விகாரமாக உள்ளது; அறிவற்றது: அதனால் அதனைச் செத்தது என்றார். சிறியது- உயிர். 2. இவர் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவர். ஆழ்வார் திருநகரிக்குக் கிழக்கே சுமார் மூன்று கல் தொலைவிலுள்ள வைத்தமாநிதிப் பெருமாள் எழுந்தருளியிருக்கும் திருக்கோளுரில் அவதரித் தவர். அயோத்தி, மதுரை முதலிய வடநாட்டுத் திருத்தலப்பயணத்தை முடித்துக்கொண்டு கங்கை கரையில் தங்கியிருக்கும் போது தென்திசையை நோக்கி ஒரு பேரொளி தோன்றியதைக் கண்டு அதை நோக்கியே நடந்து வந்தவர். அந்த ஒளி ஆழ்வார் திருநகரியிலுள்ள திருப்புளியாழ்வார் வரை நகர்ந்து கொண்டு வந்து நின்று நம்மாழ் வார் இருப்பைக் காட்டியது. ம நி-8