பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 மலரும் நினைவுகள் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் திரு பூவராகம் பிள்ளை யும் சேனாவரையம் பாடம் சொல்லுவதில் சிறந்தவர் என்றும் சொல்லி வைத்தார். நான் பயிற்சிக் கல்லூரியில் படிக்கும்போதும், பின்னர் பயிற்சிக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றும்போதும்ஆசிரியர்கள் பாடம் சொல்லும் முறை, கல்வி உளவியல் முதலியவற்றைப் படித்துப் பயன் பெற்றவனாதலாலும், பயிற்சி பெறும் ஆசிரியர்க்குப் பாடம் சொன்னவனாதலாலும் பாடம் சொல்லுதலைப்பற்றி நன்னூலார் கூறிய, உரைக்கப் படும்பொருள் உள்ளத் தமைந்து விரையான் வெகுளான் விரும்பி முகமலர்ந்து கொள்வோன் கொள்வகை அறிந்து அவன் உளங் கொளக் கோட்டமில் மனத்தின் நூல்கொடுத்தல் என்ப" என்ற நூற்பாப் பகுதியை இப்போது நினைத்துக் கொள்ளு. கின்றேன். இந்த ஆண்டு பிப்பிரவரி (1944) யில் துறையூர் உயர்நிலைப்பள்ளிக்கு மாணாக்கர் இலக்கியக் கழகத்தில் ஒரு சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்துமாறு அழைத்தேன். என் வேண்டுகோளை ஒப்புக்கொண்டு திருவாய் மொழி: என்ற தலைப்பில் பேசினார். இதற்கு ஊர்ப் பொது மக்களில் தமிழார்வம் மிக்க பலரும் சமயார்வம் மிக்க சிலரும் வந்திருந்தனர். நம்மாழ்வார் வரலாற்றை மிக அற்புதமாக எடுத்துக்காட்டி, மதுர கவியாழ்வார் நம்மாழ். வாரைச் சந்தித்த வரலாற்றை கேட்போர் வியக்கும் வண்ணம் விவரித்து விளக்கினார். திருப்புளியாழ்வாரின் கீழ் யோகநிலையில் இருந்த நம்மாழ்வாரை’க் காண் 1. நன்னூல்-பொதுப்டாயிரம்-நூற்பா-36