பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. பு, ரா. புருடோத்தம நாயுடு 1944-சனவகித் திங்கள் என்பதாக நினைவு, சென்னைக்குப் போகும்போதெல்லாம் பன்மொழிப் புலவர் வே. வேங்கடர. ஜூலு ரெட்டியார் இல்லத்தில் தங்குவது வழக்கம். ஜான்சனின் இலக்கியக்கழகத்” திற்கு (Club) பல அறிஞர்கள் வந்து கூடுவது போல் மயிலைத் தொல்காப்பியர்' எனப்பெயர் பெற்றிருந்து பன்மொழிப்புலவர் திரு. ரெட்டியார் அவர்களின் இல்லத் திற்குப் பல பெரும் புலவர்கள் வந்து வந்து போவதுண்டு. வெளியூரிலிருந்து வரும் புலவர்கள் இரவில் அவர்தம் இல்லத்தில்தான் தங்குவார்கள். இம்முறை திரு பு. ரா. புருடோத்தம நாயுடு அவர்கள் ஏதோ அலுவலாக சென்னைக்கு வந்தவர் திரு. ரெட்டியார் இல்லத்தில் தங்கி னார். நான் அப்பொழுது துறையூர் உயர்நிலைப் பள்ளி யில் தலைமையாசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந் தேன். திரு.நாயுடு அவர்கள் அப்பொழுது திருவையாற்று saja: gigi gyrfu?di (Raja’s Oriental College) gu?p: பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். இப்பொழுது முதல் முறையாகத் திரு. நாயுடு அவர் களை அடியேனுக்கு அறிமுகம் செய்து வைத்தார் பன்மொழிப் புலவர் திரு. ரெட்டியார் அவர்கள். பாடம் சொல்லுதலை அற்புதமாகச் செய்வார்’ என்றார். சேனாவரையத்தைப் பாடம் கேட்க வேண்டுமென்றால், * இவரையொத்த முறையிலேயே அண்ணாமலைப்