பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 மலரும் நினைவுகள் பிற்குப் பிறகு அடிகளாரைத்தரிசிக்கும் பேறு பெறவில்லை. இதுவே என் இறுதி சந்திப்பாகி விட்டது. D 그 ü இப்போது பகவத் கீதையை சொற்பொழிவுகளாக எழுதும் பணியில் ஈடுபட்டிருக்கின்றேன். 18-வது இயலை எழுதிக்கொண்டிருக்கின்றேன். இவ்விடத்தில் அடிகளார் இந்த உலகில் செய்து வந்த தொண்டுகளை நினைக்கும் போது காமிய கர்மங்களைத் துறப்பதைச் சந்நியாசம் என்று கூறுவர் ஞானிகள். எல்லாக் கர்மங்களின் பயனைத் துறப்பதைத் தியாகம் என்பர் தீர்க்கதரிசிகள்’ (கீதை 18:2) என்ற சுலோகம் நினைவிற்கு வருகின்றது. இந்தச் சுலோகம் சந்நியாசம்-தியாகம் என்ற கருத்தைச் சிந்திக்க வைக்கின்றது. இம்மையில் தமக்குப் பட்டம் பதவி, பேர், புகழ், மக்கட் பேறு, செல்வம், நீண்ட ஆயுள், உடல்நலம் முதலியவை அமைய வேண்டும் என்று ஆசைப்படுவதும், மறுமையில் துறக்கத்தில் உள்ள பதவிகள் வேண்டுமென்று விரும்புவதுமே காமிய கர்மம் என்பது. இத்தகைய ஆசை களை ஒழிப்பது சந்தியாசம். இது சில ஞானியர்களின் கருத்து. வேறு சில ஞானிகள் நித்திய நைமித்திய, காமிய மாகிய எல்லாக் காமங்களின் பயனை விட்டு விடுவதே தியாகம் என்கின்றனர். சந்நியாசம் என்பதும் தியாகம் என்பதும் ஒரு கருத்தைத்தான் விளக்குகின்றன என்பது பரந்தாமனின் கோட்பாடு. அற்றது பற்றெனில் உற்றது வீடு திருவாய் 2:5) என்கின்றார் நம்மாழ்வார். காமிய வினைகளைத் துறத்தலே சந்நியாசம். சந்நியாசி வினை புரியாமல் இருக்க வேண்டிய தேவை இல்லை. வினை புரியாமல் ஒருவரும் உலகில் ஒருக்கணமும் இருக்க முடியாது. துறவி துறப்பதெல்லாம் காமிய வினையேயன்றி வேறு அல்ல. ஆனால் தியாகம் எனப் படுவது வினையின் பயனை விரும்பாது வினையைப் புரிவதே ஆகும். பெருந்தவத்திரு சித்பவானந்த அடிகள் இந்த இரண்டு பெரு நெறிகட்கும் எடுத்துக்காட்டாக வழ்ந்து, அண்மையில் (1986) வீடு பேற்றை அடைந்த 豪km了。6T、