பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 மலரும் நினைவுகள் இன்னோரன்ன பல நூல்களைப் பல துறைகளிலும் எழுதித் தமிழன்னைக்கு அணி செய்தல் வேண்டும். இதற்குச் செடியாய வல் வினைகள் தீர்க்கும் திரு வேங்கடவன் இவருக்கு உடல் நலமும் மனவளமும் அருள் வானாக என அவன் திருவடிகளை நினைந்து வாழ்த்துகின் றேன்' என்று எழுதினார். திரு நாயுடு அவர்களின் தூய உள்ளத்தில் எழுந்த இந்த ஆசியின் கனம் இன்றளவும் என்னை எழுத்துப் பணியில் ஈடுபடச் செய்து வருகின்றது. என்பது என் அதிராத நம்பிக்கை. சைவம் மக்களிடையே பரவியதுபோல வைணவம் பரவவில்லை. சைவ மடங்கள் சமயத்தைப் பரப்புவதில் மேற்கொண்டு வரும் தொண்டுகளைப் போல வைணவ மடங்கள் தொண்டுகளை மேற்கொள்ளவில்லை. ஆழ்வார் கள் பன்னிருவர், அவர்களால் அருளிச் செய்யப் பெற்ற பிரபந்தங்களின் தொகுப்பே நாலாயிரத்திவ்வியப் பிரபந்தம் என்ற செய்தியே பெரும்பாலோருக்குத் தெரி யாமல் இருந்தது. பேராசிரியர் எஸ். வையாபுரி பிள்ளை போன்ற சிறந்த அறிஞர்கள் அடங்கிய குழுவின் துணை கொண்டு மர்ரே கம்பெனி (5, தம்பு செட்டித் தெரு : சென்னை-1) எஸ். இராஜம் அவர்கள் வெளியிட்ட குறைந்த விலை நாலாயிரத்திவ்வியப் பிரபந்தப் பதிப்பும் (1955, 1956) திரு நாயுடு அவர்களின் ஈட்டின் தமிழாக்க மும் பொது மக்களிடம் வைணவம் பரவத் துணை செய்தன. பகவத் பிரபந்தம் என வழங்கும் திருவாய்மொழியின் பெயரும் மணிப் பிரவாள நடையில் அமைந்த இதன் உரை களாகிய ஆறாயிரப்படி, ஒன்பதினாயிரப்படி, பன்னீரா யிரப்படி, இருபத்துநாலாயிரப்படி, முப்பத்து ஆறாயிரப் படி என்று ஐந்து உரைகளின் தொகுப்பு பகவத் விஷயம் என்ற பெயரால் வழங்குவதும் திரு. நாயுடு அவர்களின் ஈட்டின் தமிழாக்கத்தாலேயே பொது மக்கள் அறிய வாய்ப்புகள் ஏ ற் ப ட் ட ன. திருவாய் மொழியின் உரைகளை வைணவர்கள் வியாக்கியானம்’