பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பு. ரா. புருடோத்தம நாயுடு 89 என்ற பெயராலேயே வழங்குவர். நூல்களின் அளவை யினைக் கிரந்தம் என்னும் அளவுப் பெயரால் அளவிட்டுக் கூறும் வழக்கு தமிழிலும் உண்டு என்பதை யாப்பருங் கலக் காரிகையின் பாயிர உரையால் தெளியலாம்; ஒற்றொழித்து உயிரும் உயிர் மெய்யுமான முப்பத்திரண்டு எழுத்துகளையுடையது கிரந்தம்’ எனப்படும். படி என்பது, அளவு என்னும் பெயரினையுடையது. இதனைத் திரு. நாயுடு அவர்கள் ஈட்டின் தமிழாக்கம் என்ற நூலின் முதற் பகுதியின் முன்னுரையில் தெளிவாக விளக்கு கின்றார். ஆறாயிரப்படி : இஃது இராமாது சர் காலத்திலேயே திருக்குருகைப் பிரான் பிள்ளான்” என்பவரால் உடையவர் பணித்தபடி அருளிச் செய்யப் பெற்றது. பிள்ளான் உடைய வரின் மானச புத்திரராகவும் முதன்மைச் சீடராகவும் திகழ்ந்தவர். இந்த வியாக்கியானம் ஆறாயிரம் கிரந்தங் களையுடையதாதலின் இந்த உரையும் ஆறாயிரப்படி’ என்ற திருநாமம் பெற்றது. இறைவனைப்பற்றிக் கூறு கின்றவிஷ்ணு புராணம் ஆறாயிரம் கிரந்தங்களையுடைய தாதலின் இறைவனைப் பற்றிக் கூறுகின்ற இத்தமிழ் மறைக்கும் அத்தொகையளவிலேயே இந்த வியாக்கி யானத்தை அருளிச் செய்தார் பிள்ளான். ஒன்பதாயிரப்படி : இதனை அருளிச் செய்தவர் கஞ்சீயர். உடையவர் பிரம்ம சூத்திரத்திற்கு அருளிச் செய்த பூரீபாஷ்யம் ஒன்பதாயிரம் கிரந்தங்களையுடைய தாலின் அத்தொகையளவில் இந்த வியாக்கியானம் எழுந்தது. நஞ்சீயர் தம் ஆசாரியராகிய பட்டரிடம் ஆறாயிரப்படி வியாக்கியானத்தைப் பெற்று அதனைச் சிறிது விரிவாகச் செய்யத் திருவுள்ளம்பற்றி பட்டரின் அதுமதி பெற்று இதனை அருளிச் செய்ததாக வரலாறு. அ. இவர் திருமலை நம்பியின் திருக்குமாரர்; உடையவரின் சகோதரியின் பிள்ளை .