பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 G மலரும் நினைவுகள் பன்னீராயிரப்படி : இதனை அருளிச் செய்தவர் வாதி கேசரி அழகிய மணவாள சீயர். முன்புள்ள பெரியோர் கள் அருளிச் செய்த வியாக்கியானங்களையெல்லாம் கண்டு அவற்றின் சார தரமான பொருள் சிறப்புகளையெல்லாம் சுருக்கி, எல்லார்க்கும் எளிதாகவும் விளக்கமாகவும் இருக்குமாறு அருளிச் செய்தனர். பூரீபாகவதம் பன்னிரா யிரம் கிரந்தங்களை உடையதாதலின் அத்தொகையளவில் இந்த வியாக்கியானம் எழுந்தது. இருபத்து நாலாயிரப்படி : இதனை அருளிச் செய்தவர் 'வயாக்கியானச் சக்கரவர்த்தி' என்ற அடை மொழியுடன் திகழும் பெரிய வாச்சான் பிள்ளை என்பவர். இவர் நம் பிள்ளையின் மாணாக்கர். ஆசாரியரின் விருப்பத்திற். கிணங்க ஒழுகும் மாணாக்கர். தம் பக்கலில் எல்லாச் சாத்திரங்களையும் அலகு அலகாகக் கற்றவர், தம் ஆசாரி யரின் நியமனப்படி இந்த வியாக்கியானத்தைச் செய்தார் ஆச்சான் பிள்ளை. பூரீராமாயணம் இருபத்து நாலாயிரம் சுலோகங்களையுடையதாதலின் அத்தொகையளவில் இந்த வியாக்கியானம் எழுந்தது. முப்பத்து ஆறாயிரப்படி : இதனை எழுதி உதவியவர் வடக்குத் திரு வீதிப்பிள்ளை . இவர்தம் ஆசாரியரான நம் பிள்ளை ஒரு முறை தி ரு வ |ா ய் மொழி சம்பந்தமாக நாடோறும் அருளிச் செய்து வந்த சொற் பொழிவுகளைக் கேட்டுக் குறிப்பெடுத்துத் தனியே ஏடு களில் எழுதி வரலாயினர். இதுவே ஈடு முப்பத்தாறாயிரப் படி என்ற வியாக்கியானம். இதனை ஈடு என்ற திருப் பெயராலே வழங்குவர். ஈடு என்பது உடல் குளிர் முதலிய வற்றால் தாக்காதிருக்கும் பொருட்டு அணிந்து கொள்ளும் 6. இஃது இருபத்து நாலாயிரப்படி, முப்பத் துஆறா யிரப்படி என்னும் வியாக்கியானங்கட்கு காலத்தாற். பிற்பட்டதாயினும் எண் வரிசை நோக்கி ஈண்டு எழுதப் பெறுகின்றது.