பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பு. ரா. புருடோத்தம நாயுடு § { கவசத்தைக் குறிக்கும். கவசம் உடலைக் காத்தல் போன்று: இந்த வியாக்கியானமும் கற்போராலும் எழுதுவோரா லும் வேற்று மக்களாலும் தன்னிலை திரிந்து மாறுபடாத படி திருவாய்மொழியைக் காத்து நிற்றலின் இதற்கு ஈடு’ என்ற தனிச் சிறப்புப் பெயரினை நம் முன்னோர் வைத்து வழங்கினர். இது நம்பிள்ளை நாடோறும் காலட்சேபத் தில் அருளிச் செய்தனவற்றை வடக்குத் திருவீதிப் பிள்ளை யால் எழுதிவைக்கப்பட்டதாதவில் இதனை ஈடு' என்று வழங்கினர் என்று கொள்ளுதலும் அமையும், இடுதல்எழுதுதல், இது சுருதப்பிரகாசியினை ஒத்திருத்தலின் இதனை ஈடு என்றும் தன்னைக் கற்பார் யாவரையும் இறைவனிடத்து ஈடுபடச் செய்வதாதலின் ஈடு என வழங்கினர் என்றும் கூறுவதுண்டு. பிரம்ம சூத்திரத்திற்கு உடையவர் செய்தருளின பூரீ பாஷ்யத்தின் ஆழ்பொருள் எல்லாரும் விளங்கும் பொருட்டுச் சுதரிசன பட்டர் என்பார் செய்தருளின நூலே சுருதப்பிரகாசிகை என்பது; இது முப்பத்தாறாயிரம் கிரந்தங்களையுடையது. இத் தொகையளவில் இவ்வியாக்கியானம் எழுந்தது. வடக்குத் திருவிதிப் பிள்ளை இதனை எழுதினாலும் இதன் ஆசிரியர் நம்பிள்ளையே யாதலால் அப்பெரியாரின் திருப்பெயரைச் சேர்த்து 5ம் பிள்ளை ஈடு என்ற திருப்பெயராலும் இவ்வியாக்கியானம் வழங்கி வருகின்றது. - திருவாய்மொழி இறைவனால் மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஆழ்வாரால் அருளிச் செய்யப்பட்டது என்பதை நாம் அறிவோம். இங்ங்னமே வியாக்கியானங் களும் இறைவனுடைய திருவருளுக்கு முற்றும் இலக்கான வர்களும் ஆழ்வாருடைய பேரருளுக்குப் பாத்திரர்களாயும் வடமொழி தென்மொழி ஆகிய இருமொழிகளிலும் வல்லவர்களாயும் இருந்து பெருமக்களால் அருளிச் செய்யப் பெற்றவை. இதனால் திருவாய் மொழியைப் போலவே வியாக்கியானங்களும் அருமைபெருமைகளை யுடையவை. இவை சுவாதுபவத்தோடு செய்யட்