பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை 9莎 பேராசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளை அவர்களின் அறைக்கு இட்டுச் சென்று என்னை அவருக்கு (இப்படிச் சொல்லுவதைவிட அப்பெரியாரை எனக்கு) அறிமுகப் படுத்தி வைத்தார். அப்போது நான் துறையூர் உயர் நிலைப்பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். பன்மொழிப்புலவர் என்னை அறிமுகப் படுத்தும்போது, இவர் இளந்தலைமையாசிரியர். தமிழ்ப்பற்று மிக்கவர். தமிழில் வடமொழி கலந்து எழுதுவதை விரும்பாதவர் . அறிவியல் துறைகளில் புலமை மிக்கவர் என்றெல்லாம். இன்னும் எப்படி எப்படியோ சொல்லி புகழ் மாலை சூட்டினார். பன்மொழிப் புலவரின் அன்பு என்னைப் பற்றி அப்படியெல்லாம் சொல்லச் செய்தது. பெரும் பேராசிரியர் முன் எனக்கு நாணித் தலைகுனியும் நிலைஏற்பட்டுவிட்டது. இருவருமே என் நிலையை அறிந்து கொண்டது அவா.கள் இன்முகத் தில் பிரதிபலித்தது. மிகவும் மகிழ்ச்சி. அதுவும் புதிதாகத் தொடங்கிய பள்ளியில் தலைமையாசிரியர் பதவி ஏற்பதென்பது மிகவும் சிரமமான பணியை ஏற்றுக் கொண்டுள்ளீர்கள் என்பது பொருள். கடுமையாக உழைத்துப் பள்ளியை மேல் நிலைக்குக் கொணரவேண்டும். இதனால் உங்கட்குப் பேரும் புகழும் வருவதற்கு வழியேற்படும்' என்றார்கள் பிள்ளையவர்கள் . உழைப்பிற்கு அஞ்சாதவர் இந்த இளைஞர் கணித ஆசிரியர்கள், அறிவியல் ஆசிரியர்கள் கிடைக்காத காலம். நிர்வாகப் பொறுப்பு, புதிய வகுப்புகட்கு கீற்றுக் கொட்டகை அமைத்தல், புதிதாக வாங்கப் பெற்ற நிலத்தில் ஆடுகளன்களை அமைத்தல், உரிய இடங்களில் செடிகளை நட்டு மரமாக்குதல் முதலிய பல்வேறு பொறுப்புகளுடன் வாரத்திற்கு 28 பாட வேளைகள் (Periods) வகுப்பறையில் உழைக்கின்றார். கணிதமும் அறிவியலும் கற்பிப்பது இவருக்குக் கைவந்த கலை. இந்த