பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 மலரும் நினைவுகள் நிலையில் வித்துவான் தேர்வுக்கும் படித்து வருகின் றார்.’’ என்றெல்லாம் கூறினார் பன்மொழிப் புலவர். இவற்றுள் எல்லாம் உண்மை நிலைகளை உணர்த்து வனவாக இருந்தமையால் எனக்குப் பெருமித உணர்ச்சி யும் உண்டாகி விட்டது. நான் உழைப்பது போதாது; மேலும் உழைக்கவேண்டும்.' என்ற சங்கல்பமும் எடுத்துக் கொண்டேன். பின்னர் பேராசிரியருடன் மேற்கொண்ட என் உரை யாடல் பல துறைகளில் விரிந்து சென்றது. பிள்ளையவர்கள் கேட்டார்கள்: நீங்கள் அறிவியல் ஆசிரியராயிற்றே , Telescope, Microscope, Magnifing lens ørgårl Jor போன்ற கலைச் சொற்களை எப்படித் தமிழில் கலைச் சொற்களாக்குவீர்கள்?' என்று. ஐயா, தங்கள் போன்ற பெரியோர்களின் முன்னிலையில் நான் ஒரு கற்றுக்குட்டி, நான் இப்பொழுது கற்று வருபவன். தாங்கள் இவற்றைப் பற்றிச் சிந்தித்திருக்கலாம். தாங்கள் சிந்தித்தவற்றைக் கூறினால் நானும் அவற்றைக் கேட்டுப் பயன் பெறுவேன்; மேலும் அவ்வழியில் சிந்திப்பதற்கும் நெறிமுறைகளையும் கண்டு கொள்வேன்’ என்று மறுமொழிபகர்ந்தேன் மிகவும் பணிவாக நான் அப்போது 27 அகவையை எட்டினவன். பேராசிரியரோ 60 அகவையை எட்டும் நிலையில் இருந்: தவர். இன்னும் ஒன்றிரண்டு ஆண்டுகளில் ஒய்வுபெறும். நிலையிலும் இருந்தார் என்றும் ஏற்கெனவே பன்மொழிப் புலவர் மூலம் அறிந்து கொண்டுமிருந்தேன். பேராசிரியர் பிள்ளையவர்கள் சொன்னார்கள்: Telescope என்பதைத் துாரதரிஷணி என்று மொழி பெயர்க்கலாம். Microscopeஐ 'சூ r-ம தரிஷணி” என்று தமிழாக்கம் செய்யலாம். Magnifying lens என் பதைப் பூதக் கண்ணாடி எனலாம்’ என்று. இம் மாதிரி சந்தர்ப்பங்களிலும், உத்தியோக வேட்டையில் பேட்டிக் காகச் செல்லும்போது குழுவினர் விடுக்கும் வினாக் களுக்கு விடையிறுக்க வேண்டிய சந்தர்ப்பங்களிலும்