பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை 母” சாதுர்யமாகவும் சதுரப்பாட்டுடனும் பேசவும் விடையளிக் கவும் இறைவன் ஆற்றலை அளித்து என்னை வாழ்விக்கின் றான் என்பது என் அதுபவம். நான் சொன்னேன் : ஐயா, தாங்கள் சொன்ன மூன்று கலைச் சொற்களையும் ஒன்றன்பின் ஒன்றாக கரும் பலகையில், Teiescope – gT grgif@96Rf Microscope-சூக சமதரிஸ்ணி என்றும் இவற்றை யடுத்து பிரியதரிஸ்னி என்றும் எழுதலாம்; அடுத்து, Magnifying lens-பூதக் கண்ணாடி என்றும் எழுதிக் கொள்ளலாம் (தயவு செய்து அதிகப்பிரசங்கத்தனத்தை மன்னிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்) என்று கூறி என் கருத்தை விளக்கத் தொடங்கினேன். "ஐயா, தமிழிலுள்ள அகப்பொருள் பாடல்களில் * பரத்தையிற பிரிவு என்ற ஒரு துறை உண்டல்லவா? இதில் பெரும் பங்கு கொள்பவன் பாணன் என்ற பாத்திரம் என்பதை நாம் அறிவோம். இவற்றைக் கருத்தில் பின்னணியாகக் கொண்டு சிந்தித்தால் ஓர் அற்புதமான பொருள் என் மனத்தில் எழுகின்றது. பிரியதரிஷணி' மனைவியைக் குறிக்கின்றது. இவள், துாரதரிஷணி என்ற சொல்லுக்கு தனக்குத் தெரியாமல் தொலைவில் பரத்தை யொருத்தியுடன் தன் கணவர் தொடர்பு கொண்டுள்ளார் என்று பொருள் கொண்டு அவர்பால் ஐயம் எழ இடம் அளிக்கும். இங்ங்னமே, சூrாம தரிஷணி என்ற சொல் இதே எண்ண ஓட்டத்தில் தனக்குத் தெரியாமலும் வேறு எவரும் அறிந்து கொள்ள முடியாதவாறும் பரத்தை யொருத்தியுடன் அதிநுட்பமாக-அதிசூட்சுமமாகத் தொடர்பு கொண்டுள்ளார் தன் கணவர் என்று கருது வதற்கும் இடம் அளிக்கும் அல்லவா? இப்படியெல்லாம் பொருள் மாறாட்டத்தை விளைவிக்கும் இந்தச் சொற். களுக்குப் பதிலாக, ԼՁ ծ நி- 7