பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& மலரும் நினைவுகள் Telescope - தொலைநோக்கி Microscope-நுண்அணுப் பெருக்கி. என்ற தூய தமிழ்ச் சொற்களைப் போட்டுக் கொண்டால் இந்த விதக் குழப்பத்தை உண்டாக்கா, தமிழ்மொழியின் சிறப்பாற்றலைத் தெரிவிப்பதாகவும் இருக்கும். சொற் களே தாம் குறிப்பிடும் கருவிகளின் செயலையும் சுட்டி யுரைப்பதாகவும் அமையும் என்று நளினமாகக்கூறினேன். தொடர்ந்து, பூதக் கண்ணாடி என்ற சொல், மூக்குக் &airóðr fro).” (Spectacles) என்பதைப்போல், பூதங் கள் தரித்துக் கொள்ளும் கண்ணாடி என்ற பொருளையும் தருவதாக அமைந்து விடுமல்லவா? இதற்குப் பதிலாக 'உருப்பெருக்கி" என்ற தமிழ்ச்சொல்லை ஏற்றுக்கொண் டால் தமிழ்மொழி புதிய சொல்லாக்கத்திற்கெல்லாம் வளைத்து கொடுக்கும் தனித்தன்மை வாய்ந்த மொழி என்பதையும் விளக்கி நிற்கின்றதல்ல தா?’ என்று மேலும் கூறினேன். பேராசிரியர் அவர்கள் என் குட்டிச் சொற்பொழிவை' கூர்ந்து கவனித்தார். கணத்துக்குக்கணம் அவர் முகப் பாவனையில் மாற்றங்கள் நடைபெற்று வந்ததை நான் கவனிக்காமல் இல்லை.தன் இருக்கையினின்றும் எழுந்தார். என் அருகில் வந்தார். அப்படியே என்னைக் கட்டிக் கொண்டு, 'இளைஞரே, நீங்கள் சிந்திக்கின்றீர்கள். உங்கள் சிந்தனை மேன்மேலும் வளர்ந்து அறிவியல் தமிழைத் தூய தமிழாக்கத் துணை புரிவதாகுக. உங்கள் வயதை விட, இருமடங்கு வயதைத் தாண்டிய தான், தமிழ் மொழியின்பால் பெரு விருப்புடைய நான், உங்களை வாழ்த்துகின்றேன். தங்கள் தமிழ்ப் பணி பெருகி வளர்வதாகுக' என்றும் இறைவனை நினைந்து போற்றுகின் றேன் என்றார்.நான் பேராசிரியரின் அன்புத் தழுவலால், அவர் காட்டிய அன்புப் பெருக்கால் வெலவெலத்துப் போனேன். அருகிலிருந்த பன்மொழிப் புலவரும் இந்த அன்பு உரையாடலில் சொக்கிய நிலையில் இருப்பதை என்