பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை §§ னால் காண முடிந்தது. அவரும், என்னை நோக்கி, 'தம்பி, உங்களுடைய உண்மையான தமிழ்ப்பற்றையும் சிந்திக்கும் ஆற்றலையும் இன்றுதான் என்னால் நன்றாகக் காண முடிந்தது. திரு. பிள்ளையவர்களின் வாழ்த்து உங்கள் பல துறைப் பணிகளையும், வளமுடையதாக்கும்’ என்று ஆசி கூறி வாழ்த்தினார். இக்காட்சி இன்று நடை பெற்றதுபோல் என் உள்ளத்தில் பசுமையாகவே உள்ளது .

  • எழுத்து’ என்ற இதழில் வெளி வந்த செய்தி ஒன்று நினை விற்கு வருகின்றது. சர்முகம்மது உஸ்மான் சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தபோது யாரோ ஒரு பேரன்பர் துணைவேந்தருக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தாராம். ஒரு நாள் வரலாற்றுப் பேரறிஞரான கே. ஏ. நீலகண்ட சாஸ்திரியார் துணைவேந்தரைம் பார்க்கச் சென்றிருந்தபோது துணைவேந்தர் சாஸ்திரி யாடருன் இக் கடிதத்தைத்தந்து படிக்குமாறு பணிக்க அதில் 'தமிழ்த் தெரியாத இந்த வையாபுரிப் பிள்ளை யைப் பல்கலைக் கழகப் பதவியிலிருந்து விலக்கிவிட வேண்டும்' என்று எழுதியிருந்ததாம். இஃது ஒரு மாநாட்டுத்தீர்மானமாகவும் இருந்ததாம், பேராசிரியரே இதற்கு என்ன யோசனை கூறுகின்றீர்கள்?’ என்று துணைவேந்தர் சாஸ்திரியாரைக் கேட்க, அதற்குப் பின்னவர் மேசைக்கு அடியிலிருந்த கழிவுதாள் கூடை யைக் கண்களால் சுட்டினாராம். சீற்றம் கண்களில் பிரதி பலித்ததாம். துணைவேந்தரும் நானும் அதைத்தான் செய்யப்போகிறேன்' என்று முறுவலித்தாராம். இலக்கிய ஆராய்ச்சித் துறையில் துருவ மீனாகத் திகழ்ந்த பேராசிரியர் ஒருவருக்கு நேரிட நேர்ந்த கதி இது.

ஒரு கிகழ்ச்சி : நான் காரைக்குடியிலிருந்தபோது ஒரு மாநாட்டுத் தீர்மானம் : பல ஆண்டுகட்கு முன்னர் மதுரை மாவட்டம் பெரிய குளத்தில் நடைபெற்ற ஒரு திருக்குறள் மாநாட்டில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்