பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

T 00 - மலரும் நினைவுகள் பட்டதாம். திரு. வையாபுரிப் பிள்ளை திருக்குறள் காலத்தைப் பின்னுக்குத் தள்ளி விட்டதை இந்த மாநாடு வன்மையாகக் கண்டிக்கின்றது. மேலும், திருவள்ளுவர் காலம் அதற்கும் முற்பட்டது என்பதை ஒருமனதாக இம் மாநாடு தீர்மானிக்கின்றது' என்ற கருத்துப்பட அமைந்த இத்தீர்மானத்தை வாக்கெடுத்து அறுதியிட்டதாம். தொன்மையான நூலின் காலத்தை மக்களாட்சி முறையில் அறுதியிட்டது சரிதானா? என்பது ஒரு பெரிய கேள்வி. கருத்தரங்குகள், பட்டிமன்றங்கள் போன்ற மேடைகளில் தக்க சான்றுகளுடன் இதுகாறும் வெளிவந்த ஆராய்ச்சி முடிவுகளை மேலும் அலசலாம். குறை கூறலாம். நிறை இருந்தால் போற்றலாம். ஆராய்ச்சி இதழ்களில் மறுப்பு கள் வெளியிடலாம். ஆனால், மாநாட்டில் வாக்கெடுத்து முடிவு காண்பது அடாத செயல். பேரகராதி ஆசிரியர் : சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதியின் பதிப்பாசிரியராகத் திகழ்ந்து பெரும் பணி ஆற்றியவர் பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை. இப் பெரும் பணி பல நிலைகளில் பல குழுக்களின் உதவியால் நிறைவேற்றப்பெற்றது. தொடக்கத்தில் சொற்களின் பொருவுை விளக்கும் பாங்கில் இலக்கியச் சான்றுகள் காலவரிசையில் (தொன்மையிலிருந்து இன்று வரை என்ற முறையில்) காட்டப்பெற்று வந்தன. இடையிலும் முடி விலும் இந்நிலை மாறியது. மனத்திற்குத் தோன்றிய வாறு எவ்வித வரையறையுமின்றி காட்டப் பெற்றுள்ளன. இந்த அகராதியில் குறைகளே இல்லையென்று கூறவிட முடியாது. ஆனால் இக்குறைகளை இவரே உணர்ந்து எடுத்துக்காட்டுவார். அச்சேறாத நிலையிலிருந்தால் திருத்திக்கொள்வார். கருத்து வேற்றுமையுள்ளவர்கள் பொழிந்த வசைமாரிகளையும் நகைத்துக்கொண்டே ஏற்று மகிழ்வார். குறைக்கு எடுத்துக்காட்டு ஒன்று: *கன்னல்’ என்ற சொல்லுக்குக் குருவி' என்ற பொருளும் அந்த அகராதியில் காணப் பெறுகின்றது. இது தவறானது. என்பதைப் பிள்ளையவர்களே ஒப்புக் கொண்டுள்ளார்கள்.