பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை # 3 i .பல பெரியோர்கள் அடங்கிய குழு கன்னலெனும் சிறு குருவி” என்று ஒரு பாடவில் வருவதைச் சான்றாக ஏற்றுக் கொண்டதால் ஏற்பட்ட தவறு என்று அவரே கூறியுள்ளார். பேரகராதிக்குப் பிள்ளையவர்கள் எழுதி புள்ள நீண்ட ஆங்கில முகவுரை ஆய்வாளர் கட்கு அவர் வழங்கியுள்ள ஓர் அறிவுக் கருவூலம்; பிற்காலத்தில் ஆய்வில் ஈடுபடுவோருக்கு அஃது ஒரு கலங்கரை விளக்கம். பதிப்பாசிரியர்: பேரகராதிப்பணி நிறைவு பெற்ற பிறகு பேராசிரியர் பிள்ளையவர்கள் சில பழந்தமிழ் நூல்களை ஆய்ந்து பதிப்பிக்கும் பணியில் ஈடுபட்டார்கள். தமிழ் தாத்தா மகாமகோப்பாத்தியாய டாக்டர் உ. வே. சாமிநாதஅய்யர் அவர்களின் பதிப்புத்திறனுக்கு அருகில் வருகின்றது பிள்ளையவர்களின் பதிப்புத்திறன் . இருந்த வற்றை இருந்தபடியே பதிப்பித்தல் என்ற உறுதியும் விருப்பப்படிப் பாடங்களைத் திருத்துதல், குதர்க்கமாக உரை கூறுதல் போன்ற திரிபுணர்ச்சிக்கு இடங் கொடுத்தல் போன்ற தவறுகளை செய்யாதிருத்தலும் இவர்தம் நேர்மைப் பண்புகளாகும். நான் காரைக் குடியிலிருந்தபோது நூலகப் பொறுப்பு என்னிடம் தரப் பெற்றிருந்ததால் இவர்களுடைய நூல்களையும் பதிப் பித்த நூல்களையும் வாங்கிவைத்திருக்கின்றேன். இவர் பதிப்பித்தும் பல்கலைக்கழகத்தின் மூலம் வெளிவந்த * புறத் திரட்டு' என்னும் அரிய நூல் இலக்கிய ஆய்வாளர் கட்கு ஒரு சிறந்த கையேடாக உதவும். யான் திருப்பதி யில் பணியாற்றிய காலத்தில் நான் பதிப்பித்து உரைக் குறிப்பிடனும் ஆய்வுக் குறிப்புடனும் பல்கலைக்கழக மூலம் வெளியிட்ட முத்தொள் ளாயிர விளக்கம்' என்ற நூலுக்குப் புறத்திரட்டு பேரளவில் துணைபுரிந்ததை இப்போது நினைவு கூர்கின்றேன். சென்னைப் பல் கலைக்கழகம்மூலம் இப்பெருமகனார் உரைக் குறிப்புடன் வெளியிட்ட சில நீதி நூல்களையும் பார்த்துப் படித்து மகிழ்ந்ததுண்டு.