பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

召莎念 மலரும் நினைவுகள் கால ஆராய்ச்சி : கால ஆராய்ச்சியைப் பற்றிய இவர் முடிவுகளைப் பெரும்பாலான தமிழறிஞர்கள் ஒப்புக்கொள்வதில்லை . திருவள்ளுவர் காலத்தை சுமார் கி. பி. 80 0 என்பதையும், கம்பரது காலத்தைக் கி. பி. 1178 என்று கூறுவதையும், சிலப்பதிகாரம்மணிமேகலையின் காலம் கி. பி. ஆறு அல்லது ஏழாம் நூற்றாண்டு என்று மொழிவதை அவர்கள் ஒப்புக் கொள்வதில்லை. ஆனால் இவரது ஆய்வு முறை அறிவியல் முறையின் அடிப்படையிலும் இவர் கூறும் வாதங்கள் அளவை நூல் முறையிலும் அமைந்து படிப் போரைக் கவர்கின்றது. இந்த முறை, கால ஆராய்ச்சி யில் ஈடுபடுவோருக்குச் சிறந்த வழிகாட்டியாக அமையும். எடுத்துக்காட்டாக, கம்பரது காலத்தை அறுதியிடும் இப்பெரியார் எண்ணிய சகாத்தம் எண்ணுரற்றேழின் மேல்” என்று கம்பராமாயணப்படிகளில் காணும் ஒரு தனியனைக் கொண்டு கி. பி. 885-இல் கம்பர் தமது காவியத்தை அரங்கேற்றினார் என்று வெளியாகின்றது. என்று கூறி “இதனை ஒப்புக்கொண்டால் பலவித அசம்பாவிதங்களை ஒப்புக்கொள்வதாய் நேரிடும்’ என்று மொழிபவர். மூன்று காரணங்களால் இத்தனியனின் இயல்பான பொருள் முரண்பாட்டையும் காட்டுவர்? அடுத்து, வேறு சில காரணங்களை முறையாக எடுத்துக் காட்டிக் கம்பரது காலத்தை அறுதியிடுவார். ஆனால், இவர்தம் சிந்தாமணியின் கால ஆராய்ச்சி’ கால ஆராய்ச்சியில் ஈடுபடுவோர்க்குச் சிறந்த தொரு முன் 1. தமிழ்ச் சுடர் மணிகள்-திருவள்ளுவர் காலம் பக். 75. 2. டிெ. கம்பர் காலம்-பக். 130 3. டிெ. பக். 111 114. 4. சீவகசிந்தாவணி - (சமாஜப்பதிப்பு - மூலம் மட்டும்)-முகவுரை காண்க.