பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை I 0.3 மாதிரியாகும். சிறந்த பாரிஸ்டர் (வக்கீல்) ஒருவர் ஒரு பெரிய வழக்கை நீதி மன்றத்தில் அளவை முறையைக் கையாண்டு வாதம் புரிவதுபோல சிந்தாமணியின் கால எல்லையை சுமார் 10-ஆம் நூற்றாண்டு என்று அறுதியிடு கின்றார். அதன் காலத்தைப் பற்றி ஒரு மேலெல்லையை உறுதி செய்து கொண்டு இதற்கு மேல் இவருடைய காலம் இருக்கமுடியாது’ என்று வரம்பு கட்டுகின்றார். அங்ங்னமே ஒரு கீழ் எல்லையையும் உறுதி செய்துகொண்டு *இதற்குக்கீழ், இவருடைய காலம் இருக்க முடியாது’ என்று வரம்பு கட்டுகின்றார். மேலிருந்து கீழும் கீழி லிருந்து மேலுமாக சில நிகழ்ச்சிகளையும் சான்றுகளை யும் எடுத்துக்காட்டிக் கொண்டே அவற்றை ஒவ்வொன் றாகத் தள்ளுபடி செய்து கொண்டே வந்து இவருடைய முடிவை உறுதியாக அறுதியிடுகின்றார். அறிஞர் பெருமக்கள் சிவருக்கு இவர்தம் பல்வேறு ஆய்வு முடிவுகள் ஒப்புக் கொள்ளக் கூடியவையாக இல்லை யெனினும், இவரது அணுகு முறையை எவரும் பாராட் டாமல் இருக்க முடியாது. அப்படி யாராவது இருப்பின் அது புலவர்கட்கே பரம்பரைச் சொத்தாக இறங்கி வரும் பொறாமைக்காய்ச்சல் என்று கொள்ளுவதைத் தவிர வேறு காரணம் அடியேனுக்குப் புலப்படவில்லை. ஆனால், இதுகாறும் இவர் ஆய்வுகளில் கண்டுள்ள முடிவுகளை மறுத்து வெளி வந்த கட்டுரைகளை யான் படிக்கும் வாய்ப்பில்லை . அத்தகைய மறுப்புக் கட்டுரைகள் வெளி வந்தனவாகத் தெரியவில்லை. ஆனால் அவர்கள் வாழ்ந்த காலத்தில் புலவர்களிடையே கண்டனக் குரல்கள் எழுந்தன. வசைமாரிகள் குவிந்தன . மறுப்புக் கட்டுரைகள் எழுதி வெளியிடுவது அறிஞர் கட்கு அழகு; பொறுப்பும் கூட. ஏன்? தமிழ்ப் பண் பாட்டிற்கும் அத்தகைய செயலே பொருத்தமானது. 1946-இல் சென்னைப் பல்கலைக்கழகப் பணியினின்றும் ஓய்வு பெற்ற பிறகு இவர் கோட்டையூர் பெருவள்ளல்