பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 04 மலரும் நினைவுகள் டாக்டர் இராம. அழகப்பச் செட்டியார் கேரளப் பல் கலைக்கழகத்திற்கு தமிழ் ஆராய்ச்சிக் கென்று வழங்கிய ஒர் இலட்சம் வெண் பொற்காசுகளை வழங்கிய திட்டத் தின் கீழ் சில ஆண்டுகள் பணியேற்று சில ஆண்டுகள் பணி யாற்றி வந்தார்கள். நான் 1950-ஆம் ஆண்டில் துறை யூர்ப் பணியைத் துறந்து காரைக்குடியில் வாழ்ந்த காலத்தில் (1950-1960) பேராசிரியர் இருமுறை காரைக் குடிக்கு வருகை புரிந்தார்கள். ஒரு முறை சா. கணேசன் (கம்பன் அடிப்பொடி) அவர்கள் நடத்தி வந்த கம்பன் திருநாள் முதல் நாள் நிகழ்ச்சிக்குத் தலைமைப் பொறுப் பேற்க வந்திருந்தார்கள். அப்போது கற்பக நிலையத்தில் (இது சா. க. வின் இல்லத்தின் பெயர்) ஒய்வாக உரை யாடி பல இலக்கியச் செய்திகளைப் பற்றி அளவளாவி மகிழ்ந்தேன். இன்னொருமுறை சொ. முருகப்பனார் எழுதிய கம்பராமாயணம்-பாலகாண்டம் வெளியீட்டு விழாவிற்கு வந்திருந்தார்கள். இது வள்ளல் அழகப்பர் தலைமையில் நடைபெற்றது. திரு பிள்ளையவர்கள் நூலை வெளியிட்டார்கள். அவர் வெளியீட்டுரை பின்னர் நூல்வடிவிலும் வெளிவந்தது. அதனையும் பார்த்து மகிழ்ந் திருக்கின்றேன். இதன் பிறகு இவரைப் பார்த்து அளவளா வும் வாய்ப்பு எனக்கு ஏற்படவில்லை. இவர் மறைந்த செய்திதான் நாளிதழ்கள் வாயிலாக எனக்கு எட்டியது. இன்று என் உள்ளத்தில் பேராசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளை அவர்கள் ஒரு சிறந்த ஆய்வு மன்னராகவும் பண் பாட்டின் கொடுமுடியாகவும் இடம் பெற்றுத் திகழ் கின்றார்கள். பெரியவர்கள் ஆராய்ச்சிப் போரில் நான் என்னை எந்த முறையிலும் உட்படுத்திக் கொள்வதில்லை, அரசன் சண்முகனார்.--சிவஞான முனிவர், இராகவ அய்யங்கார்-நாவலர் சோமசுந்தர பாரதியார், சொல்லின் செல்வர் ரா. பி. சேதுப்பிள்ளை-அறிஞர் அண்ணாதுரை இவர்களிடையே நடைபெற்ற