பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

贾莎& மலரும் நினைவுகள் 1934-ஆம் ஆண்டு ஜூன் திங்கள் என் கல்லூரிப் படிப்பு தொடங்கியது திருச்சி புனித சூசையப்பர் கல்லூரியில் இரண்டாண்டுக் காலம் திருச்சி சவுக்குப் பகுதியில் உள்ள காசியப்பாராவுத்தர் ஸ்டோர்ஸ் என்ற விடுதியில் தங்கும் அறை அமைந்தது. என் அரிய நண்பர் திரு. பி. அரங்கசாமி ரெட்டியார் அங்குத் தங்கிப் படித்த தால் எனக்கும் அங்கு அறை அமைத்துத் தந்தார். அக் காலத்தில் திருச்சி டவுன் ஹாலுக்கு எதிரிலுள்ள மைதானத்தில் அடிக்கடிப் பெரியாரின் சொற் பொழிவுகள் நிகழும். நாங்கள் இருவரும் அவற்றைச் செவிமடுக்கும் வாய்ப்புகள் பெறுவோம். இது தவிர ஆதிகுடி வேங்கடராம அய்யர் உணவு விடுதியில் (திருச்சி தேவர் மன்றத்திற்கு அருகில் இருந்தது) உணவு கொள்ளப் போகும்போது அருகிலுள்ள வாசக சாலையில் குடியரசு’ விடுதலை குமரன் போன்ற தமிழ் செய்தித்தாள் க்ளையும் படிக்கும் வாய்ப்புகளும் எங்கட்குக் கிடைத்தன. தந்தை பெரியார் அவர்களின் கருத்துகள் அனைத்தும் என் உள்ளத்தைக் கவராவிடிலும் அவரது சமுதாயச் சீர்த்திருத்தம் பற்றிய கருத்துகள் என் மனத்தைப்பெரிதும் கவரும். அக்காலத்தில் காந்தியடிகளின் அரிசன் (Harian) என்ற ஆங்கில ஏடும் என் மனத்தைக் கவர்ந்தது. ஞாயிறன்று கெயிட்டி சினிமாக் கொட்டகைக்கு எதிரி லிருந்த மாவட்ட நூலகத்தில் ஒரு மணி நேரம் காலம் கழிப்பதுண்டு. அப்போது திரு. வி. க. அவர்களின் நூல் களில் என் மனத்தை அதிகம் கவர்ந்தவை இரண்டு நூல் கள். ஒன்று பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத துணை'; மற்றொன்று மனித வாழ்கையும் காந்தியடிகளும்’ இதனால் காந்தியடிகளின் கருத்துகள் என் மனத்தில் ஆழமாகப் பதிந்தன. இந்த இரு பெரியார்களின் கருத்து களும் என் இளம் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்தன; என்னை நன்னெறிப்படுத்தின. கட்சிச் சார்பு அன்றிருந்து இன்றுவரை என்னிடம் ஏற்படாவிட்டாலும் கருத்துகளின்