பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தந்தை பெரியார் 169 சார்பு இன்றுவரை இருந்து வருகின்றது. என் மாணவப் பருவத்தில் தந்தைப் பெரியாரின் நேர்த் தொடர்பு எனக்கு ஏற்பட வாய்ப்பில்லை. சென்னையில் படித்த ஓராண்டுக் காலத்திலும் (1940-41) என் படிப்பில் தான் அக்கறை சென்றது. சில சமயம் பனகல் பார்க் அருகில் பெரியார் பேச்சைக் கேட்பதுண்டு. திருச்சியில் படித்தபோது ஒரு முறையும் சென்னையில் படித்த போது ஒருமுறையும் காந்தியடிகளின் பேச்சையும் கேட்டதுண்டு. துறையூரில் தலைமையாசிரியனாக இருந்தபோது (1941-1950) தந்தை பெரியார் அடிக்கடி துறையூருக்கு வருவதுண்டு. அவர் தங்கும் இடம் சேடத் தெருவிலுள்ள கிருட்டிணன் செட்டியார் அவர்களின் திருமாளிகை. அவர் துறையூருக்கு வருகை புரியும் போதெல்லாம் அவரைப் பார்த்து அளவளாவுவதில் தவறுவதில்லை. பெரியவர் களிடமும் சிறியவர்களிடமும் அவர் காட்டும் ஒரே மாதிரி யான மரியாதை என் உள்ளத்தைக் கவர்ந்தது. நான் அவரிடம் நேராக அறிமுகமானது என் இருபத்தைந்தாவது அகவையில்; தலைமையாசிரியனாக வாழ்க்கை தொடங்கிய காலத்தில். பார்க்கும் போதெல்லாம் வாங்க தம்பி; உட்காருங்க” என்று சொல்லும் பாங்கே என் உள்ளத் தைக் கவரும். பெரிய முனிவர் ஒருவரைச் சீடன் ஒருவன் நெருங்கிப்பணிவது போன்ற ஒருவித பிரமை-மயக்கம்ஏற்படும், அவருடைய அறிவுரையில் தெளிவு இருக்கும்: ஞான ஒளியும் வீசும். ஒரு சமயம் தம்பி, நீங்கள் சிறிய வயதில் தலைமையாசிரியர் பொறுப்பை வகிக்கின்றீர்கள் . நம்முடைய தமிழ்ப் பிள்ளைகளை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள் பிராமணர்கள் நடத்தும் பள்ளிகளில் பிராமணப் பிள்ளைகள் கவனிக்கப்படுவது உங்கட்கு ஒளி காட்டட்டும். எப்பொழுதும் விதிகட்குப் புறம்பாகச் செயற்படாதீர்கள். எப்பொழுதும் நேர்வழியைக்கடைப் பிடியுங்கள்; குறுக்கு வழி வேண்டா என்று சொன்னது. இன்றும் என் நினைவில் பசுமையாகவுள்ளது.