பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தந்தை பெரியார் # I முதலியாரைப் பார்ப்பதற்காகப் பள்ளிக்குச் சென்றேன். அவரால் அப்பள்ளியின் குழுபற்றிய பத்திரத்தின் நகல் கிடைக்காவிடில் தந்தை பெரியாரை அணுகிக் கேட்கலாம் என்றுதான் நினைத்தேன். மாலை 3-மணி இருக்கும், திரு முதலியாரைப் பார்த்து இதைப்பற்றிக் கேட்டேன். அங்குத்தாளாளர் அலுவலகத்தில் சிறுவன் ஒருவன் (வயது சுமார் இருபது இருக்கலாம்) எழுத்தராகப் பணியாற்றி வந்தான். அவனை வருமாறு சொல்லியனுப்பினார் தலைமையாசிரியர் முதலியார். அவன் ஒரு பார்ப்பணச் சிறுவன் . 'தாளாளர் இசைவின்றி நகல் தர முடியாது’’’ என்று மறுத்து விட்டான். திரு முதலியாரும் என் நிலை இதுதான் இங்கு. எந்தவிதச் செல்வாக்குமின்றி பணி யாற்றிவருகின்றேன். எதிர்காலம் ஒளிமயமாக இருக்கு மென்று கருதுகின்றேன். என் இயலாமைக்குப் பொறுத் தருளுங்கள்’’ என்று மறு மொழி தந்தார். பின்னர் அவர் வழங்கிய குளிர் பானத்தை அருந்தி விடை பெற்றுக் கொண்டு இரவு புறப்படும் இருப்பூர்தியில் திருச்சியை அடைந்தேன் அதிகாலையில். பின்னர் துறையூருக்கு வந்து சேர்ந்தேன். ஒன்றிரண்டு நாட்களில் தந்தை பெரியாருக்கு ஒரு கடிதம் எழுதினேன். மதிப்புக்கும் பெருமைக்கும் உரிய தந்தை அவர்கட்கு, வணக்கம், கோவை சென்று திரும்பும் போது தங்களைப் பார்ப்பதற்காகவே ஈரோடு வந்தேன். மகாஜனப் பள்ளியின் நிர்வாகக் குழுபற்றிய பதிவு செய்யப்பெற்ற பத்திரத்தின் நகல்வேண்டும். எங்கள் பள்ளியின் நிர்வாகத்தை அம் முறையில் அமைக்க வேண்டும் . திரு M. R. பெருமாள் முதலியாரைப் பார்த்தேன் (தலைமையாசிரியர்). அவரால் தர இயல வில்லை; தாளாளர் அலுவலகத்தில் எழுத்தராகப் பணி புரியும் சிறுவன் தர மறுத்து விட்டான். தாங்கள் ஊரில் இல்லாமையால் வாளா திரும்பினேன், தயவு செய்து மேற்குறிப்பிட்ட பத்திரத்தின் நகலை ஒரு வாரத்தில்