பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

A 12 மலரும் நினைவுகள் அனுப்பி வைத்தால் மிக்க நன்றியுடையவனாக இருப்பேன். துறையூர் வருங்கால் தங்களைச் சந்தித்து மேலும் பல யோசனைகளையும் பெறுவேன் . சிரமம் தந்ததற்குப் பொறுத்தருள்க' என்பது கடிதம். ஒரு வாரத்தில் பதிவு அஞ்சலில் ஆசியுடன் நகல் வந்து சேர்ந்தது. ஏற். கெனவே திருச்சி பொன் ன ப்யா உயர் நிலைப்பள்ளியின் குழு பற்றிய பத்திரத்தின் நகல் வாங்கி வைத்திருந்தேன். இந்த நகல் கம்பெனிச் சட்டப்படித் (Companys Act) தயாரிக்கப்பட்டது; குறைந்தது இருபதுபேர் உறுப்பினர் களாக இருக்கவேண்டும் இதன் படி. ஈரோட்டு நகல் அற. நிலைய நிறுவனச் சட்டப்படி (Trust Act) தயாரிக்கப் பெற்றது; இதன்படி ஏழுபேர் உறுப்பினர்கள் போதும், எங்கள் பள்ளி நிர்வாகம் இதனையே விரும்பியது. குடும்பத்தினர் அறுவரும் தலைமையாசிரியர் பணித் துறைசார்ந்தவராகவும் (E% Officio) கொண்டு குழு அமைக்கப் பெற்று பதிவு செய்யப் பெற்றது. இந்த முறையில் தந்தை பெரியார் எங்கள் பள்ளிக்கு உதவினார். 1950-60 இல் காரைக்குடியில் பணியாற்றியபோது எப்படியோ திராவிட கழகத்தைச் சேர்ந்த என். ஆர். சாமி. (பீங்கான்பாத்திர வணிகர்) என் நண்பரானார். சில நாட்களில் கல்லுக்கட்டி (தெற்கு) யிலுள்ள இவர் கடையில் சில மணித் துளிகள் அமர்ந்து உரையாடுவ துண்டு. காரைக்குடியில் மகர் நோன்பு பொட்டலில் (காந்தி சதுக்கத்தில்) மாபெரும் கூட்டத்தில் தந்தை, பெரியார் பேசுவதுண்டு. அப்பொழுதெல்லாம் கூட்டத் தின் ஒரு மூலையில் அமர்ந்து கொண்டு தந்தை பெரியாரின் சொற்பொழிவினைக் கேட்பதுண்டு. எந்தக் கூட்ட மானாலும் தந்தை பெரியார் மூன்று மணி நேரத்திற்குக் குறையாமல் பேசுவார். இப்படித் தமிழகத்தில் சுமார் எழுபது ஆண்டுகட்கு மேல் நடமாடிய தந்தை பெரியார் தம்முடைய கருத்துக்களைத் தமிழகத்தில்பரப்பிக்கொண்டு.