பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தந்தை பெரியார் 芷惠岛 வந்தார். கடவுள் மறுப்புக் கொள்கைகளைத் தவிர சமூகத் தீர்த்தம், விதவைத் திருமணம், சாதியொழிப்பு சுயமரியாதை பற்றிய கொள்கைகள் யாவும் எனக்கு உடன்பாடேயாகும். தனிமையில் பழகும்போது இவர் தம் பரந்த மனப்பான்மை தெளிவாகும் , வயதில் குறைந்த இளைஞர்கள் சிறுவர்களிடம்கூட இவர் மரியாதையுடன் பேசுவதைக் கண்டு மகிழ்ந்த துண்டு. வாங்க தம்பி’ என்ன வேலையாக வந்தீர்கள்? என்பன போன்ற சொற்கள் இவர்கள் திருவாயினின்று புறப்படும்போது எல்லோருமே சொக்கிப் போவார்கள், இவர்தம் காந்த சக்தி வாய்ந்த பேச்சில் சிக்கியவர்களுள் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன். பொன்மனச் செம்மல் எம். ஜி. இராமச்சந்திரன், பட்டுக்கோட்டை அழகிரிசாமி, பூவாளுர் பொன்னம்பலம், செட்டி நாட்டில் சீர்திருத்தச் செம்மல் சொ. முருகப்பா, கானாடுகாத்தான் சண்முகம், பாவேந்தர் பாரதிதாசன் முதலியோர் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர்கள்.தேர்தலில் காங்கிரசு கட்சியைத் தோற்கடித்து ஆட்சி பீடத்தையும் கைப்பற்றி ஆண்டவர்களையும் ஆள்பவர்களையும் காண் கின்றோம். நம் அருமை இராஜாஜிகூட இவருடைய நெருங்கிய நண்பராகத் தொடர்ந்து திகழ்ந்தனர் என்றால் தந்தை பெரியாரின் பெருமையை எடுத்துச் சொல்ல முடியுமா? என் நல்லுழின் காரணமாக இன்று வரை நல்லோரின் கூட்டுறவுதான் இருந்து வருகின்றது . திரு. வி. க., விவேகாநந்த அடிகள், சுவாமி சித்பவா நந்தர், காந்தியடிகள் போன்ற பெரியோர்களின் நூல் களையே படித்துப் பயன்பெறவும் என் நல்லூழ் துணை நின்றது . ஜகவீரபாண்டியன், மு. இராகவய்யங்கார், ரா. ராகவய்யங்கார், ந. மு. வேங்கடசாமி நாட்டார், பூவராகம் பிள்ளை, கரந்தைக் கவியரசு வேங்கடாசலம் பிள்ளை. தமிழ்க்கடல் ராய. சொக்கலிங்கம், பண்டித ம. தி-8