பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலரும் நினைவுகள் } } 4 மணி கதிரேசன் செட்டியார். ஒளவை துரைசாமிபிள்ளை, தெ. பொ. மீனாட்சி சுந்தரனார், பேராசிரியர் க. வெள்ளைவாரணனார், திரு பு. ரா. புருடோத்தம நாயுடு, டாக்டர் மு. வரதராசனார், டாக்டர் வ. சுப. மாணிக்கனார் போன்ற பெரும் புலவர்களின் கருத்தும் எழுத்தும் என்னைக் கவர்ந்தமையால் யானும் ஓரளவு தமிழ் தெரிந்தவனாகத் தமிழகத்தில் நடமாடி வருகிறேன்; எழுதியும் வருகின்றேன். ஒரு சமயம் என் அரிய நண்பர் என். ஆர். சாமி சொன்னது: "தந்தை பெரியார் அவர்கள் வந்துள் ளார்கள், என் இல்லத்தில்தான் எழுந்தருளியுள்ளார்கள். அவர் தொடர்பு உங்கட்கு உண்டு என்பதை வெளிப் படையாகக் காட்டிக் கொள்ளவேண்டா. திரு சா. கணேசனின் பேராதரவு பெற்றுத் திகழ்கின்றீர்கள் என்பதை நான் நன்கு அறிவேன். இப்பெரியாருக்குத் தந்தை பெரியாரைப் பிடிக்காது. நீங்கள் தந்தை பெரியாருடன் தொடர்பு கொண்டவர் என்பது சா. க. அவர்கட்குத் தெரிந்தால் அவர் உங்கள் மீது கொண்டிருக்கும் அன்பும் ஆதரவும் குறைந்தாலும் குறையலாம். ஆகவே, தந்தை பெரியாரைப் பார்க்க வேண்டும் என்று நினைத்தால் இரவு ஒன்பது மணி சுமாருக்கு என் இல்லத்திற்கு வாருங்கள். நானும் ஐயா விடம் தங்கள் வருகையைச் சொல்விவைக்கின்றேன்’ என்பது. நல்ல அறிவுரை. காரைக்குடியிலிருந்தவரை இப்படித்தான் தந்தை பெரியாரிடம் பழகி வந்தேன். இதனால் எனக்கு எவ்வித தீமையும் நேரிடவில்லை. என் வாழ்வில் எந்தக் கட்சிச் சார்பும் எனக்கு ஏற்பட வில்லை. நான் மேற்கொண்டிருக்கும் ஆசிரியப் பணிக்கு இஃது சிறிதும் ஒவ்வாதது. எல்லோருடைய பேச்சுகளைக் கேட்டாலும், உரைகளைப் படித்தாலும் எனக்கு உகந்த தவைதாம் என் மனத்தில் படியும்; ஏனையவை படியா. ஒரு சமயம் என். ஆர். சாமி அண்ணே (இப்படித்தான்