பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தந்தை பெரியார் 夏夏岳 அவர் என்னை விளிப்பது) கடைக்கு வாருங்கள் ஐயாவிட மிருந்து (இப்படித்தான் தந்தை பெரியாரைக் குறிப் பிடுவது) ஒரு பரிந்துரைக் கடிதம் வாங்கியுள்ளேன். அதைத் தாங்கள் படித்துக் கருத்து கூறவேண்டும்' என்று கூறி கடைக்கு அழைத்துச் சென்றார். அக்காலத் தில் குன்றக்குடியில் குன்றக்குடி அடிகளார் பொறுப்பில் பெண்கள் ஆசிரியப் பயிற்சிப் பள்ளி ஒன்று நடை பெற்று வந்தது. அதில் தம் தமக்கை மகளுக்கு ஒர் இடம் கிடைக்கும்படிப் பரிந்துரைக்கும்படித் தந்தை பெரியா ரைக் கேட்டிருந்தார் என். ஆர். சாமி. அதற்குப் பெரியார் எழுதிக் கொடுத்திருந்த கடிதம்: பெருந்தவத்திரு. குன்றக்குடி அடிகளார் மகாசந்நிதானத்திற்கு அடியேன் ஈ. வே. இராமசாமி வணக்கத்துடன் எழுதிக்கொள்வது. இக்கடிதம் கொண்டு வரும் திரு என். ஆர். சாமி நம் கட்சித் தொண்டர்களில் தலையாயவர். இவருடைய தமக்கைப் பெண் தங்கள் பள்ளியில் ஆசிரியப் பயிற்சி பெற விழைகின்றாள். மகாசந்நிதானம் அருள் கூர்ந்து அப்பெண்ணுக்கு ஒர் இடம் கிடைக்கப் பணிவன்புடன் வேண்டுகின்றேன். வணக்கம்-இங்ஙனம் அன்பன் ஈ. வே. இராமசாமி' என்று எழுதப் பெற்றிருந்தது. என். ஆர். சாமி என்னிடம் சொன்னது: * அண்ணே; நம் தந்தை பெரியார் பெருமிதத்துடன் எழுதாமல் இப்படிக் கூழைக் கும்பிடு போடுகின்றாரே, மடத்திற்கு அடிமைபோல் எழுதுகின்றாரே " என்றார். நான் சொன்னேன்: என். ஆர். சாமி, நாம் அதுபவம் இல்லாதவர்கள். நம்மைவிட நான்கு மடங்கு அதுபவம் பெற்றிருப்பவர்கள் நமது ஐயா அவர்கள். இங்கிதம் அறிந்தவர்கள். திரு. குன்றக்குடி அடிகளாரும் மடத்துச் சம்பிரதாயங்கள் பலவற்றைத் துறந்து பொது மக்களுடன் கலந்து பழகத்துடித்து நிற்பவர்கள்: மடத்திலேயே பல சீர்திருத்தங்களை நடைமுறைக்குக் கொணர்ந்தவர்கள். சான்றாண்மையை நம் ஐயா அவர்களிடமும் காணலாம்"