பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

置重5 மலரும் நினைவுகள் அடிகளாரிடமும் நாம் தெரிந்து கொள்ளலாம். தவிர, ஐயா அவர்கள் சந் நிதானம் வகிக்கும் பீடத்திற்கு மதிப் தருகின்றார்கள். இவற்றை நம் ஐயா அவர்களின் மேடைப் பேச்சிலிருந்து தெரிந்து கொள்ள முடியாது தனிமையிலும் உபதேசம் பெறவேண்டும். பிராமன களை ஆரியர்கள்’ என்று கூறி மேடையில் கடிகின் றார்கள். நம் அருமை இராஜாஜியின் உயிரனைய தோழ ராகவும் திகழ்கின்றார்கள்...' என்று சொன்னேன். ○。s r 1 ஆமாம் அண்ணே, ஆமாம் அண்ணே. நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை, ’’ என்று சொல்லி ஆமோதித்தார் என். ஆர். சாமி. பின்னர் அவர் அடிகளாரைச் சந்தித்துத்தம் தமக்கை மகளுக்குப்பள்ளியில் இடமும் பெற்றார். நான் திருப்பதி சென்ற பிறகு தந்தை பெரியார் அவர்களைப் பார்க்கும் பேறு அடியோடு அற்றுப் போய் விட்டது. கிட்டத்தட்டப் பதினேழு ஆண்டுகள் (19601977) அவரைப் பார்க்கவே இல்லை. சென்னைக்கு வந்த பிறகும் பார்த்துப் பேசும் பேறு பெறவில்லை. இராஜாஜி அவர்கள் திருநாடு அலங்களித்தபோது அவரது திருமேனி சுடுகாட்டில் சடங்குகட்குப் பிறகு, எரியூட்டப்பெறும்வரை சுடுகாட்டில் துக்கச் சூழலில் காத்துக் கிடந்தார் என்பதைச் செய்தித் தாளில் படித் தேன். தந்தை பெரியாரும் இராஜாஜியும் கொண்டிருந்த நட்பு வரலாற்றுப் புகழ் பெற்றது . அது நம்போலி யருக்கு என்றுமே பாடம் புகட்டவல்லது; நம் சந்ததி. யினருக்கும் வழிகாட்டியாக இருப்பது . சில ஆண்டுகட்கு முன்னர் தாமரைச் செல்வர் தெ. து. சுந்தரவடி வேலு அவர்கள் சென்னைப் பல்கலைக்கழகத் தில் பெரியார் அறக்கட்டளைச் சொற்பொழிவுகளை நிகழ்த்தும்போது தந்தை பெரியாரைப் பற்றியும் அவர்தம் அருங்குணங்கள், அவர் தமிழகத்திற்கு ஆற்றிய தொண்டுகள் பற்றிய செய்திகளையும் விரிவாக வெளி