பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தந்தை பெரியார் x 芷夏7

யிட்டார்கள். அவற்றையெல்லாம் இப்போது நினைத்துப் பார்க்கின்றேன், அவர் சொன்னவற்றில் ஒன்ம்ை மட்டிலும் நினைவு கூர்கின்றேன். ஒரு சமயம் பெரியார் ஒரு கூட்டத்திற்குக் காரில் சென்று கொண்டிருந்த பொழுது அவர் கொள்கைகளைப் பிடிக்காத ஒர் அன்பர் அவர்மீது செருப்பை வீசினாராம். அஃது அவர்மீது வந்து வீழ்ந்ததாம். செருப்பை எடுத்துப் பார்க்கும். பாது அது சிறந்ததாக இருந்ததாம். உடனே காரோட்டி டேம் காரைத் திருப்பு. இந்தச் செருப்பு மிக நன்றாக ள்ளது. இன்னொரு செருப்பு அங்குத் தெருவில் கிடக்கும். இந்தச் செருப்பு நமக்கும் பயன்படாது; தெருவில் கிடக்கும் செருப்பும் ஒருவருக்கும் பயன்படாது. தாம் சென்று அதனை எடுத்துக் கொண்டால் இவை இரண்டும் யாருக்கும் பயன்படும் என்று கூறி அந்தச் செருப்பையும் எடுத்து ஜோடி சேர்த்துக்கொண்டாராம் அரசியல், பொதுத் தொண்டு, சமூகத் தொண்டு போன்ற வற்றில் ஈடுபட்டு அவற்றை தம் வாழ்க்கைப் பணியாகக் கொண்டிருப்பவர்கட்கு இத்தகைய பரிசும் வெகுமதியும் கிடைக்கத்தான் செய்யும். இவற்றைப் பொருட்படுத் தாது தம் பணியைப் பொறுமையுடன் செய்து கொண்டு தான் வரவேண்டும் என்பது இந் நிகழ்ச்சியால் நாம் தந்தை பெரியாரிடம் கற்றுக்கொள்ளும் பாடம். தவிர, இத்தகைய நிகழ்ச்சி நமக்கு ஒரு புதிராகவும் உள்ளது:

பி টযু நான் கேள்வியுற்ற இன்னொரு நிகழ்ச்சி. அறிஞர் அண்ணா முதல்வராகப் பணியாற்றிய காலம். ஏதோ ஒரு முக்கிய நிகழ்ச்சி இராஜா அண்ணாமலை மன்றத்தில் நடை பெற்றது. பெருங் கூட்டம். பார்வையாளர் கூட்டத் தில் முன் வரிசையில் இரண்டு கிழவர்களும்-இராஜாஜி யும் தந்தை பெரியாரும்- அமர்ந்திருக்கின்றனர். அறிஞர் அண்ணா வருகின்றார்; மேடை ஏறும்முன் இவர்களைக் காண்கின்றார். இவர்கள் அருகே வந்து இருவர் காலையும் தொண்டு வணங்கி விட்டு மேடை ஏறுகின்றார். குழுமி