பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

覆多尘 மலரும் நினைவுகள் oulogy1.h & ups; 5 off.” (The older carry it in their heads and the younger in their pockets) at 33rp cuff இன்றும் என் மனத்தில் பசுமையாகவே உள்ளது. tol விரிவுரை முடிந்து திரு. நாயுடு அவருடைய அறைக்கு வந்ததும் நான் அவரைச் சந்தித்து நான் கோரி வந்த உதவியைத் தெரிவித்தேன். ஐயா, நான் பி.எஸ்சி, எல்.டி. பட்டங்கள் பெற்றவன். மூன்றாண்டுகள் ஆசிரியப் பணி அதுபவம் உடையவன். தமிழ் எம்.ஏ. தனியாகப் பயின்று தேர்வு எழுத இசைவு அளிக்க மறுக்கின்றது பல்கலைக் கழகம். பி. ஏ. பட்டம் பெற்றவர்கட்குத்தான் அளிக்கப்படும் என்கின்றது. ஆசிரியப் பணி அநுபவத்தைக் கணக்கிற்கொண்டு பி.ஏ. தேர்வு எழுதக் கோரினேன். பல்கலைக் கழக மரபுப்படி எந்தப் பட்டமும் பெறாத வர்கட்குத்தான் இந்தச் சலுகை உண்டு என்று கூறி அதற்கும் அனுமதி அளிக்க மறுக்கின்றது. இதுகுறித்து வழி அமைக்க மற்றொரு ஆட்சிக்குழு உறுப்பினர் ஜஸ்டிஸ் பoர் அகமது (அப்போது ஆழ்வார் பேட்டையில் குடியிருந் தார்) அவர்களையும் என் குருநாதர் மறைத்திரு. ஜெரோம் டி செளலா (லயோலா கல்லூரி முதல்வர்) அவர்களையும் பார்த்து வேண்டுகோள் விடுத்திருக் கின்றேன். நீங்கள் மூவரும் உதவினால் என் நிலையில் உள்ள பலருக்கும் உதவுவதாக இருக்கும்.’’ என்று ஆங்கிலத்தில் தான் விளக்கினேன். அவரும் தெலுங்கில் சூஸ்தானு பாதப்பட வொத்து (பார்க்கலாம், கவலைப்பட வேண்டா) என்று அன்பாகக் கூறி விடை அளித்தார். என் கோரிக்கை 1947இல் நிறைவேறிற்று. விதிகள் திருத்தப் பெற்று வழி அமைக்கப் பெற்றது. இதன் பிறகு 1960-மே மாதம் வரையில் இப்பெருமகனை சந்திக் கும் வாய்ப்பு ஏற்படவில்லை. காரைக்குடியை விட்டுத் திருப்பதிப் பணியை ஏற்றுக் கொள்ளப் போகும்முன் (1960) சென்னை கீழ்ப்பாக்கம் ஆர்மஸ் சாலையில் திரு. நாயுடுவின் இல்லத்தில் நடை