பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துணைவேந்தர் எஸ்.கோவிந்தராஜுலு நாயுடு i 25 பெற்ற பேட்டியின் போது தான் இவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது அந்தப் பேட்டியில்தான் திருப்பதிப் பணிக்கு நான் தேர்ந்தெடுக்கவும் பெற்றேன். திரு. தி, மூ. காராயண சாமிபபிள்ளையவர்கள் (வல்லுநர் குழு வின் உறுப்பினர்) என் திறமை முதலியவற்றைச் சிலாகித் துப்பேசி திரு. நாயுடு அவர்கட்கு நன்கு அறிமுகம் செய்து வைத்தார். 1960 ஆகஸ்டு முதல் தேதியன்று திருவேங்கடவன் பல்கலைக்கழகத்தில் முதல் தமிழ் விரிவுரையாளராகப் பணி ஏற்றேன். ஏற்று ஒருவாரத் திற்குள் துணை வேந்தர் நாயுடு அவர்களை மரியாதைக் காக அவர் இல்லத்தில் சந்தித்தேன். அப்போது அவர் மிக அன்பாகப்பேசினார். என்னுடைய ஆராய்ச்சியையும் எழுத்துப் பணியையும் போற்றியதுடன் அவற்றில் ஆழமாகவும் ஈடுபடும்படியும் சொன்னார். பல்கலைக் கழக நூலகத்தில் தமிழ்ப் பிரிவில் நூல் வளத்தைப் பெருக்குமாறு பணித்தார். எவ்வளவு தொகையானாலும் வழங்கப்படும் என்றும் கூறினார். ஆனால் உள்ளுர் ரெட்டி களுடன் பழகி அவர்கள் அரசியலில் சிக்கிக்கொள்ளா திருக்கு மாறும் எச்சாத்தார். சாதிவெறியும் சமயவெறி யும் சிறிதும் இல்லாத எனக்கு இந்த எச்சரிக்கை பொருந்து மாறில்லை. சங்கோசப்படாமல் தம்மை அடிக்கடிச் சந்தித்துப் பேசலாம் என்றும், காலை 7-9 மணி இதற்கு, ஏற்றது என்றும் சொல்லி வைத்தார். திக்கற்ற நிலையில் இருந்த எனக்கு உள்ளூர்ப் பிரமுகர் களின் உதவியும் தேவை இருக்கும் என்று கருதி முதலில் நகரசபைத் தலைவர் திரு. P. முனி ரெட்டி அவர்களைச் சந்தித்து அறிமுகப்படுத்திக் கொண்டேன் (அவர் இன்று இல்லை). அவரும் நான் தங்கியிருந்த சாலைக்கு அருகி லுள்ள நிம்மகாய வீதியில் தங்கியிருந்தார். தொலைவி லிருந்து வந்த நான் எந்த விதமான உதவிக்கும் தன்னை நாடலாம் என்று சொன்னார் அன்புடன். அடுத்து இன்னும் அருகிலுள்ள M. பலராமரெட்டி என்பவரையும்.