பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

j罗台 மலரும் நினைவுகள் சந்திந்து அறிமுகப் படுத்திக் கொள்ளுமாறு பணித்தனர் பல்கலைக் கழகத்தில் புதிதாக ஏற்பட்ட நண்பர்கள் , திரு. பலராமரெட்டி செல்வாக்குள்ள பல்கலைக் கழக ஆட்சிக் குழு உறுப்பினர். இவண் குறிப்பிட்ட இரண்டு ரெட்டிமார்களும் தீவிர காங்கிரஸ்காரர்கள். காந்தி நெறியில் ஒழுகும் சீலர்கள். திரு. பலராமரெட்டி மட்டிலும், மிஸ்டர் ரெட்டியார், என்னைத் தெருவில் சந்தித்துப் பேசாதீர்கள். பல்கலைக் கழகத்திற்கு வரும் போதும் என்னை அறிந்தவராகக் காட்டிக் கொள்ளாதீர் கள். தேவையிருக்கும்போது என் வீட்டிற்கு வாருங்கள்; நானும் அவ்வப்போது உங்கள் அறைக்கு வருவேன் என்னுடன் தாங்கள் பழகுவதைத் துணை வேந்தரிடம் கோள் சொல்லுவதற்கென்று பலர் காத்திருக்கின்றனர். இதனால் உங்கட்குத் தொந்தரவும் நேரிடும்’ ’ என்று என்னை எச்சரித்தார். இந்த மூன்று பேர் சந்திப்புகளும் உள்ளூர் அரசியல் நாடியை துல்லியமாக அறிந்து கொள்ள வாய்ப்பு அளித்தன. ஏழுமலையானே எனக்கு எச்சரிக்கை விடுத்ததாக இன்றளவும் கருதுகின்றேன். இந்த எச்சரிக்கைகள் என் இயல்புக்கும் ஒத்தனவாகவும் இருந்தன. நான் உள்ளுர் அரசியலையும் சாதி, சமய வெறிகளையும் கடந்து நிற்பவன்; இவற்றை வெறுப் பவனும் கூட. பள்ளி வாழ்வு, கல்லூரி வாழ்வு, அதன் பின்னர் இன்றுவரை வைணவர்களின் தொடர்புதான் எனக்கு அதிகமாக ஏற்படுகின்றன; இத்தொடர்பும் நீடிக்கின்றது. திருப்பதியில் யான் பணியாற்றியபோது எல்லாத் துறை கட்கும் இட நெருக்கடி. துறைகள் வேகமாகப் பெருகின. கட்டட வேலை அசுரவேகத்தில் மேற்கொள்ளப் பெற்றா லும் துறைகளின் பெருக்கத்திற்கேற்ப கட்டட வளர்ச்சி நடைபெற முடியவில்லை. முதுகலை வகுப்புகள் உள்ள துறைகளே இட நெருக்கடியால் தொல்லைப்பட்டபோது இளங்கலை வகுப்பு உள்ள தமிழ்த்துறையை யார்