பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. 38 மலரும் நினைவுகள் நினைவு 3 துணை வேந்தருக்கு எதிர்ப்பான மின்னாது இடித்தது போன்ற ஒரு சூழ்நிலை திடீரென்று தோன்றியது: உள்ளூர் அரசியல், சாதிச்சச்சரவு போன்ற எதிலும் பத்தினித்தனத்தைக்கடைப்பிடித்த எனக்கு இதன் காரணம் தெரியாவிடினும் என் தோழ ஆசிரியர்கட்கு இதன் காரணம் தெரியாமல் போகாது. ஆனால் இதனை அக்கறையுடன் வினவி அறிந்துகொள்ளமுயலவில்லை. அக் காலத்தில் (1962) இந்தப் பல்கலைக்கழக கட்டுக்குள் அடங்கிய கல்லூரிகள் சித்து ர், அனந்தப்பூர், கடப்பை, கர்நூல், நெல்லூர் ஆகிய மாவட்டங்களிலுள்ளவை. இப் பகுதிகளிலுள்ள அனைத்துக் கல்லூரிகளிலுமுள்ள மான வர்கள் , ஆசிரியர்கள். மாணவர்களின் பெற்றோர்கள் இலங்கையில் மூலபலம் திரண்டதைப்போல் ஒரு நாள் திருப்பதியில் திரண்டனர். பல்கலைக் கழகத்திலிருந்து ஊர்வலம் புறப்படுகின்றது. ஊர்வலம் சுமார் ஒரு மைல் நீளத்திற்கு மேற்பட்டது. ஊர்வலத்தின் நடுவில் ஒரிடத் தில் கோவிந்தராஜுலு நாயுடு அவர்களின் கொடும்பாவி வைக்கப்பட்ட பாடையையும் அடுத்து பதுமாவதி மகளிர் கல்லூரி முதல்வர் திருமதி இராஜேசுவரி அம்மையாரின் கொடும்பாவி வைக்கப்பெற்ற பாடையையும் மாணவர்கள் சுமந்து வருகின்றனர். மாணவர்கள் சிலர் மகளிர் வேடந். தாங்கி ஒப்பாரி வைத்துக்கொண்டு செல்லுகின்றனர். கடைத்தெருவின் இருபுறமும் உள்ள கடைகளில் உள்ளோ ரிடம் கோவிந்தடு போயினாரே, கோவிந்தம்மா போயினாரே என்று அழுகையும், சிரிப்பும் கலந்த புலம்பல்களுடன் செல்லும் மகளிரின் வேடந்தாங்கிய மாணவர்கள் செல்லுகின்றனர். பறைமேளம், தாரை, தப்பட்டை, சங்குகள் முழக்கத்துடன் ஒலிக்கின்றன. பொரி, கடலை, ஒருபைசா , 2 பைசா கலந்த கலவைகளை தெருவெங்கும் இறைத்துச் செல்லும்காட்சி. சுடுகாட் டிற்குப் பிணம் செல்லும்போது நடைபெறும் கோலா கலங்கள் அனைத்தும் ஊர்வலத்தில் காணப்பெற்றன. அறையில் ஏதோ எழுதிக்கொண்டிருந்த நான் காந்தி